عن عبد الله بن عمرو رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال:
«لَيْسَ الْوَاصِلُ بِالْمُكَافِئِ، وَلَكِنِ الْوَاصِلُ الَّذِي إِذَا قُطِعَتْ رَحِمُهُ وَصَلَهَا».
[صحيح] - [رواه البخاري] - [صحيح البخاري: 5991]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹுமா கூறுகின்றார்கள் :
'பதிலுக்கு பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவார்'
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்] - [صحيح البخاري - 5991]
இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள் உறவுகளை சேர்ந்து நடப்பதிலும், உபகாரம் செய்வதிலும் பூரணமான மனிதன் யாரெனில் பதிலுக்குப் பதில் உபகாரத்தை எதிர்பாரக்கும் மனிதன் அல்ல. மாறாக உறவைப் பேணுவதில் உறவுகள் துண்டித்து நடந்தாலும் அவர்களுடன் சேர்ந்து நடப்பவனும், அல்லது அவர்கள் தன்னுடன் மோசமாக நடந்து கொண்டாலும் அதற்குப் பதிலாக அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்பவனே பூரண மனிதனாவான் என்று குறிப்பிடுகிறார்கள்