+ -

عَنْ ‌حُمْرَانَ مَوْلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ رضي الله عنه:
أَنَّهُ رَأَى عُثْمَانَ بْنَ عَفَّانَ دَعَا بِوَضُوءٍ، فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ مِنْ إِنَائِهِ، فَغَسَلَهُمَا ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ أَدْخَلَ يَمِينَهُ فِي الْوَضُوءِ، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَاسْتَنْثَرَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ ثَلَاثًا، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ غَسَلَ كُلَّ رِجْلٍ ثَلَاثًا، ثُمَّ قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ نَحْوَ وُضُوئِي هَذَا، وَقَالَ: «مَنْ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ لَا يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ غَفَرَ اللهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ».

[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 164]
المزيــد ...

உஸ்மான் இப்னு அஃப்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் அடிமையான ஹும்ரான் அவர்கள் உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் வுழு செய்த நிகழ்வை அறிவிக்கிறார்கள்: உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லித் தம் இரண்டு முன் கைகளில் மூன்று முறை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தம் வலக்கரத்தைப் பாத்திரத்தில் செலுத்தி, வாய்க் கொப்பளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி சிந்தினார்கள். பின்னர் தம் முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் இரு கைகளையும் முழங்கை உட்பட கழுவினார்கள். பின்பு தலையை ஈரக் கையால் தடவினார்கள். பின்னர் தம் இரண்டு கால்களையும் கரண்டை வரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு 'நான் வுழூச் செய்வதைப் போன்றே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வுழூச் செய்ததை பார்த்திருக்கிறேன்' என்று கூறிவிட்டு, நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் என்னிடம், 'யாரேனும் என்னுடைய இந்த வுழூவைப் போன்று செய்து, பின்னர் தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் இரண்டு ரக்அத்துகள் தொழுதால் அவர் முன்னர் செய்த (சிறு) பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்' என்று கூறினார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 164]

விளக்கம்

உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வுழுசெய்யும் முறையை, அழகிய முறையில் தெளிவு படுத்தும் நோக்கில் செயன்முறை ரீதியாக கற்றுக் கொடுத்தார்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொண்டு வரக் கூறி அதனை தனது இருகைகளிலும் மூன்று முறை ஊற்றி கழுவிவிட்டு, பின்னர் தனது வலது கையை பாத்திரத்தினுள் இட்டு நீரை எடுத்து வாயிலிட்டு நன்றாக அந்நீரை சுலட்டி, பின்னர் அதனை வெளியே கொப்பளித்ததோடு, அதே நீரால் நாசினுள் இட்டு அதனை வெளியே சிந்தினார்கள். அதனைத் தொடர்ந்து மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். பின் முழங்கை உட்பட இரு கைகளையும் கழுவினார்கள். அதனைத் தொடர்ந்து ஈரக்கையால் தலையை ஒரு தடவை தடவினார்கள். பின்னர் கரண்டைக்கால் உட்பட இரு கால்களையும் கழுவினார்கள்.
உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வுழு செய்து முடிந்ததும் தான் வுழூச் செய்ததைப் போன்றே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வுழூச் செய்ததை தான் பார்த்ததாக அவர்களிடம் தெரிவித்தார்கள். அத்துடன் அவர்கள்; வுழு செய்ததைப் போன்று வுழுசெய்து விட்டு தனது இரட்சகனுக்கு முன் நின்று உள்ளச்சத்துடன் மெய்நிலையில் - உள்ளத்தை ஓர்நிலைப்படுத்தியவராக இரண்டு ரக்அத்துக்கள் தொழுதால் அவரின் முழுமையான வுழுவிற்கும் தூய்மையான அவரின் தொழுகைக்கும் அல்லாஹ் அவரின் முன்சென்ற சிறுபாவங்களை மன்னித்து கூலி வழங்குகிறான் என்ற நற்செய்தியையும் குறிப்பிட்டார்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية Юрба الليتوانية الدرية الصربية الصومالية Кинёрвондӣ الرومانية التشيكية Малагашӣ Итолёвӣ Урумӣ Канада Озарӣ الأوكرانية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. வுழு செய்ய ஆரம்பிக்க முன் ஒருவர் தூங்கி எழுந்திருக்கா விட்டால் பாத்திரத்தினுள் கையை இடுவதற்கு முன் கழுவிக் கொள்வது முஸ்தஹப்பான வரவேற்கத்தக்க விடயமாகும், தூங்கி எழுந்திருந்தால் இரு கைகளையும் கழுவுவது கடமையாகும்.
  2. மாணவர்களுக்கு மிக விரைவில் விளங்கி, மனதில் பதிவதற்கான மிக ஏதுவான வழிமுறையைக் கற்பித்தலின் போது தெரிவு செய்வது ஆசிரியருக்கு அவசியமாகும். அவற்றுள் ஒன்றுதான் செயன்முறைக் கற்பித்தலாகும்.
  3. தொழுபவர்; உலக விடயங்களுடன் தொடர்பான ஊசலாட்டங்களைத் தவிர்ப்பதும், அதற்காக முயற்சிப்பதும் அவசியமாகும். ஏனெனில் தொழுகையின் முழுமைத்துவம் மனதை ஒர்மைப்படுத்தி அதில் ஈடுபாட்டுடன் இருப்பதில் தான் தங்கியுள்ளது. மேலும் மனதை ஒருமுகப்படுத்தி தொழுகையில் ஈடுபடாவிட்டால் தேவையில்லாத மன ஊசலாட்டங்களிருந்து தற்காத்துக்கொள்வது சிரமமான விடயமாகும். ஆகையால் தேவையற்ற எண்ணங்களில் மனதை அலையவிடாது மனதைக் கட்டுப்படுத்துவதில் கடும் பிரயத்தனம் மேற்கொள்வது அவசியமாகும்.
  4. வுழு செய்யும்போது வலதை முற்படுத்துவது முஸ்தஹப்பான –வரவேற்கத்தக்க –விடயமாகும்.
  5. வாய்க் கொப்பளித்தல், மூக்கிற்குத் நீர் செலுத்தி அதனை வெளியேற்றல் ஆகிய விடயங்களில் பிரஸ்தாப ஒழுங்கை கடைப்பிடிப்பது மார்க்க வழிகாட்டலாகும்.
  6. முகத்தையும், இரு கைகள் மற்றும் இரு கால்களை மூன்று தடவைகள் கழுவுதல் வரவேற்கத்தக்கதாகும். ஒரு தடவை கழுவுதல் கடமையாகும்.
  7. மேற்படி ஹதீஸில் குறிப்பிடப்பட்டதிற்கினங்க வுழு செய்து இரண்டு ரக்அத்துகளை தொழுவதினால் பாவங்களுக்கான அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்கிறது.
  8. வுழுவின் உறுப்புக்கள் ஒவ்வொன்றினையும் கழுவுவதற்கான எல்லைகள் உண்டு அவைகள் பின்வருமாறு : முகத்தின் எல்லை; நீளவாக்கில் வழமையில் நெற்றியில் முடி முளைக்குமிடத்திலிருந்து ஆரம்பித்து தாடி உட்பட கழுத்தின் ஆரம்பப்பகுதிவரையிலாகும். அகலவாக்கில் ஒரு காதுச்சோணையிலிருந்து மறு காதுச்சோணைவரையிலாகும். கையின் எல்லை : விரல் நுனியிலிருந்து ஆரம்பித்து முழங்கை வரையிலாகும். அதாவது மேல்கை மற்றும் முழங்கைக்கு இடைப்பட்ட பகுதியாகும். தலையின் எல்லை : வழமையில் தலை முடி முளைக்குமிடத்திருந்து இருபக்க முக ஓரமாக பிரடிவரைக்குமான பகுதியாகும். இரு காதுகளையும் மஸ்ஹ் செய்தல் தலையில் மஸ்ஹ்செய்வதில் அடங்கிவிடும். காலின் எல்லை : காலின் பாதம் மற்றும் குதிகால் உட்பட கெண்டைக்கால் வரையிலாகும்.