عَنْ عَائِشَةَ رضي الله عنها قَالَتْ:
قُلْتُ: يَا رَسُولَ اللهِ، ابْنُ جُدْعَانَ كَانَ فِي الْجَاهِلِيَّةِ يَصِلُ الرَّحِمَ، وَيُطْعِمُ الْمِسْكِينَ، فَهَلْ ذَاكَ نَافِعُهُ؟ قَالَ: «لَا يَنْفَعُهُ، إِنَّهُ لَمْ يَقُلْ يَوْمًا: رَبِّ اغْفِرْ لِي خَطِيئَتِي يَوْمَ الدِّينِ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 214]
المزيــد ...
ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறரார்கள் :
அல்லாஹ்வின் தூதரே! இப்னு ஜுத்ஆன் ஜாஹிலிய்யாக்காலத்தில் -அறியாமைக்காலத்தில்- இனபந்துக்களை பேணிநடப்பவராகவும், ஏழைகளுக்கு உணவளிப்பவராகவும் இருந்தார் இவை அவருக்கு மறுமையில் பயன் அளிக்குமா? என நான் கேட்டேன். அதற்கு நபியவர்கள் :அவை அவருக்கு எவ்விதப் பயனையும் அளிக்காது ஏனெனில் அவர் 'எனது இரட்சகனே எனக்கு எனது குற்றத்தை மறுமை நாளில் மன்னித்தருள்வாயாக என்று ஒரு நாளாவாது அவர் கூறவில்லை. என்று பதிலளித்தார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 214]
இந்த ஹதீஸில் நபியவர்கள் இஸ்லாத்திற்கு முன் இருந்த குறைஷித்தலைவர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு ஜுத்ஆன் பற்றி குறிப்பிடுகிறார்கள். அவரிடம், உறவுகளை சேர்ந்து நடந்து, உபகாரம் புரிதல் மற்றும் ஏழைகளுக்கு உணவளித்தல் போன்ற இஸ்லாம் செய்ய வேண்டும் என வலியுறுத்திக் குறிப்பிட்டிருக்கும் சிறப்பான விடயங்களில் சில காணப்பட்டன. என்றாலும் அவைகள் ஒருபோதும் மறுமையில் அவருக்கு எவ்விதப்பயனையும் தராது. அவர் அல்லாஹ்வை நிராகரித்தமையும், 'எனது இரட்சகனே எனக்கு எனது குற்றத்தை மறுமை நாளில் மன்னித்தருள்வாயாக' என்று ஒரு நாளாவாது அவர் கூறாது இருந்தமையும் இதற்கான காரணங்களாகும்.