+ -

عن أبي هريرة رضي الله عنه : أن رسول الله صلى الله عليه وسلم قال:«حقُّ المُسلمِ على المُسلمِ خمسٌّ: ردُّ السلام، وعِيَادَةُ المريض، واتباع الجنائز، وإجابة الدَّعوة، وتَشميتُ العاطِس».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள் : "ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்தாகும் : ஸலாத்திற்கு பதிலுரைத்தல், நோயுற்றறால் நலம் விசாரித்தல், மரணித்தால் இறுதிச் சடங்கில் பின்துடர்தல், விருந்துக்கு அழைத்தால் பதிலளித்தால், தும்மி, அல்ஹம்து லில்லாஹ் எனக் கூறினால் பதிலுரைத்தல்".
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

விளக்கம்

இந்நபிமொழியில் ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அவ்வாறான கடமைகள் அதிகமாக உள்ளன. எனினும் நபியவர்கள் முக்கியத்துவம் கருதி சிலவேளை குறிப்பிட்ட சிலவற்றை மாத்திரமே கூறுவார்கள். அவற்றில் உள்ளவைதான் மேற்கண்ட நபிமொழியில் அபூஹுரைரா ரலி அவர்கள் நபியவர்களைத் தொட்டும் அறிவித்துள்ள விடயங்களாகும். "ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்தாகும் : ஸலாத்திற்கு பதிலுரைத்தல்" : அதாவது ஒருவர் ஸலாம் கூறினால் அவருக்குப் பதிலளித்தல், மற்றுமொரு நபிமொழியில் "ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஆறாகும் : அவரை சந்தித்தால் ஸலாம் கூறுவீர்" என இடம்பெற்றுள்ளது. இக்கடமைகளை முஸ்லிம்கள் விடயத்தில் முறையாக மேற்கொண்டால் பிற கடமைகளை மேற்கொள்வது மிக ஏற்றமாகும். அதன் மூலம் அதிக நலவுகளும், அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்து செய்யும்பட்சத்தில் அவனிடமிருந்து நிறைய கூலிகளையும் கொண்ட இக்கடமைகளை நிறைவேற்றும் பாக்கியம் கிடைக்கின்றது. இக்கடமைகளில் முதலாவது : சந்தித்தால் ஸலாம் கூறுவதாகும் மற்றுமொரு நபிமொழியில் ஸலாத்திற்கு பதில் கூறுதல் என இடம்பெற்றுள்ளது. இரண்டாவது : நோயாளியை நலம் விசாரித்தல். ஒருவர் நோயுற்று மக்கள் தொடர்பற்று வீட்டிலோ, ஆஸ்பத்திரியிலோ இருந்தால் அவரது சகோதர முஸ்லிம்கள் அவரை நலம் விசாரிப்பது அவசியமாகும். மூன்றாவது : மரணித்தவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளல், ஒருவர் மரணித்தால் அவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு, வீட்டிலிருந்து ஜனாஸாவைப் பின்தொடர்ந்து பள்ளி அல்லது தொழுமிடத்திற்குச் சென்று, பின் மண்ணறை வரை செல்வது ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமையாகும். நான்காவது : விருந்துக்கு பதிலளித்தல், ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமை விருந்துக்கு அழைத்தால் அதற்கு பதிலளிப்பது அவசியமாகும். ஐந்தாவது : தும்மியவர் அல்ஹம்து லில்லாஹ் எனக் கூறினால் அதற்கு பதிலளித்தல். ஏனெனில் தும்மலின் மனித உடலின் பாகங்களில் உள்ள நெரிசலான காற்று வெளியேறுவதால், அல்லாஹ் அதிலிருந்து தப்பிக்க ஒரு வழியை ஏற்படுத்தி, அதன் மூலம் தும்மியவர் நிம்மதி அடைவதால் இது அல்லாஹ்வின் அருட்கொடையாக உள்ளது.எனவே அதற்காக "அல்ஹம்து லில்லாஹ்" என அல்லாஹ்வைப் புகழுமாறு பணித்துள்ளான், அதனைக் கேட்கும் சகோதரர் "யர்ஹமுகல்லாஹ்" (அல்லாஹ் உமக்கு அருள் புரியட்டும்) எனக் கூறுமாறும், அப்போது தும்மியவர் "யஹ்தீகுமுல்லாஹு வயுஸ்லிஹு பாலகும்" (அல்லாஹ் உமக்கு நேர்வழி காட்டி, உமது விடயங்களை சீராக்கட்டும்) என பதிலளிக்குமாறும் பணித்துள்ளான். அல்லாஹ்வைப் புகழாதவருக்கு பதிலளிக்க வேண்டியதில்லை, அதற்காக அவரே தன்னை நொந்து கொள்ள வேண்டுமே தவிர பிறர்மீது குற்றமில்லை.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية Юрба الليتوانية الدرية الصومالية الطاجيكية Кинёрвондӣ الرومانية المجرية التشيكية Малагашӣ Итолёвӣ Урумӣ Канада Озарӣ الأوزبكية الأوكرانية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமை இங்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அவற்றில் கடமையானதும், விரும்பத்தக்கதும் உண்டு. மக்கள், அவர்களின் நிலைகளை வைத்து அவை மாறுபடும்.
  2. தனிநபர் ஒருவர் ஸலாம் கூறினால் பதில் கூறுவது தனிநபர் கடமையாகும், கூட்டமாக இருந்தால் சமூகக் கடமையாகும்.
  3. நோயாளியை நலம் விசாரிப்பது ஒரு சமூகக் கடமையாகும்.
  4. ஜனாஸாவைப் பின்தொடர்வது சமூகக் கடமையாகும். இதன் அர்த்தம் ஜனாஸா இருக்குமிடத்திலிருந்து தொழுமிடத்திற்கும், பின் மண்ணறைக்கும் பின்துயர்ந்து செல்லலாகும்.
  5. மார்க்க சட்ட நூல்களில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு அழைக்கப்பட்ட திருமண விருந்துகளுக்கு பதிலளிப்பது கடமையாகும். ஏனைய விருந்துகளுக்கு பதிலளிப்பது வலியுறுத்தப்பட்ட ஸுன்னாவாகும்.
  6. தும்மியவர் அல்லாஹ்வைப் புகழ்ந்த பின் பதிலளிப்பது பற்றி சில அறிஞர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள் : அங்கு இருவரைத் தவிர வேறு யாருமில்லையெனின் இரண்டாம் நபர் மீது பதிலளிப்பது குறிப்பாகி விடுகின்றது. கூட்டமாக இருந்தால் பதிலளிப்பது சமூகக் கடமையாகி விடுகின்றது, குறித்த ஒருவர்தான் பதிலளிக்க வேண்டும் என்றில்லை. மற்றும் சிலர் இது ஸுன்னத் எனக் கூறுகின்றனர்.
  7. முஸ்லிம்களுக்கு மத்தியில் சகோதரத்துவம், நேசத்தைப் பலப்படுத்துவதில் இஸ்லாத்தின் மகத்துவம் இங்கு தெளிவாகின்றது.
  8. ஜும்ஆ உரை நிகழும் போது ஸலாத்திற்கோ, தும்மியவருக்கோ பதிலளிப்பது கூடாது, ஏனெனில் அதுவும் ஒரு விதப் பேச்சாகும், ஜும்ஆ உரையின் போது பிறர் பேசுவது ஹராமாகும்.
மேலதிக விபரங்களுக்கு