«اللهُمَّ لَا تَجْعَلْ قَبْرِي وَثَنًا، لَعَنَ اللهُ قَوْمًا اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ».
[صحيح] - [رواه أحمد] - [مسند أحمد: 7358]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:
'யா அல்லாஹ்! எனது மண்ணறையை (சமாதியை) வணங்கப்படும் சிலையாக ஆக்கி விடாதே! தமது நபிமார்களின் மண்ணறைகளை வணக்கஸ் தளங்களாக ஆக்கிக் கொண்ட கூட்டத்தின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக'.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார்] - [مسند أحمد - 7358]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தனது மண்ணறையை மக்கள் போற்றி வணங்கும், ஸுஜூத் செய்யும் சிலைபோல் ஆக்கிவிடாதிருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிந்தார்கள். மேலும் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கஸ்தளங்களாக எடுத்துக்கொள்வது அதனை வணங்கி வழிபடவும், அவைகளில் ஆழமான நம்பிக்கை கொள்ளவும் காரணமாக அமைந்துவிடுவதால், நபி மார்களின் அடக்கஸ்தளங்களை வணக்கஸ்தளங்களாக எடுத்துக்கொள்வது இறைவனின் அருளிலிருந்து தூரமாக்கி இறைசாபத்தைப் பெற்றுத்தரும் பெரும் பாவம் என்பதை இந்த ஹதீஸில் தெரிவித்துள்ளார்கள்.