«من اقتبَسَ علْمًا مِنَ النُّجُومِ اقْتبَسَ شُعبَة مِن السِّحرِ، زادَ ما زادَ».
[صحيح] - [رواه أبو داود وابن ماجه وأحمد] - [سنن أبي داود: 3905]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள் :
'நட்சத்திர ஜோதிடக் கலையில் ஒரு பகுதியைக் கற்பவன் சூனியக் கலையில் ஒரு பகுதியைக் கற்றவனாவான், அது அதிகரிக்க இதுவும் அதிகரிக்கும்'.
[ஸஹீஹானது-சரியானது] - - [سنن أبي داود - 3905]
யார் நட்சத்திரம் மற்றும் கிரகங்களுடன் தொடர்பான ஜோதிடக் கலைகளைக் கற்று வானியல் இயக்கங்களையும் தோற்றங்களையும் மறைவுகளையும் பூமியில் நடைபெறும் நிகழ்வுளான ஒருவரின் இறப்பு மற்றும் பிறப்பு அல்லது ஆரோக்கியமின்மை போன்றவற்றுடன் ஒப்பிட்டு எதிர்காலத்தில் நடக்கவிருப்பவற்றை அனுமானித்து கூறும் செயற்பாடுகளை மேற்கொள்கிறாரோ அவர் சூனியத்தின் ஓரு பகுதியைக் கற்றவராவார். இதனை அதிகதிகமாக கற்றுக்கொள்பவர் சூனியத்தையும் அதிகதிகம் கற்றவராவார்.