«إِنَّ رِجَالًا يَتَخَوَّضُونَ فِي مَالِ اللهِ بِغَيْرِ حَقٍّ، فَلَهُمُ النَّارُ يَوْمَ الْقِيَامَةِ».
[صحيح] - [رواه البخاري] - [صحيح البخاري: 3118]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதைத் தான் கேட்டதாக கவ்லா அல்அன்ஸாரிய்யா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்:
'சில மனிதர்கள் அல்லாஹ்வின் செல்வத்தை தான் விரும்பிய விதத்தில் அநியாயமான முறையில் கையாள்கிறார்கள். அவர்களுக்கு மறுமை நாளில் நரகமே உரியதாகும்.
முஸ்லிம்களின் உடமைகளை, செல்வத்தை தவறான முறையில் கையாளும் சில மனிதர்களை நபியவர்கள் கூறி, அவர்கள் முறையற்ற விதத்தில் சொத்துக்களை சுரண்டுகின்றனர் என்பதைக் கூறுகின்றார்கள். உரிய முறையில் அல்லாது வேறு வழிகளில் செல்வத்தை சம்பாதித்து அதனை திரட்டி, உரிய இடங்களில்,சந்தர்ப்பங்களில் செலவளிக்கப்படாத செல்வம் குறித்த பொது கருத்து இதுவாகும்.இதில் அநாதைகளின் சொத்துக்கள், வக்பு சொத்துக்கள், அமானிதங்களை ஒப்டைக்க மறுத்தல், பொது நிதியிலிருந்து அனுமதியோ, தகுதியோ இல்லாமல் எடுத்தல் போன்றன இதில் உள்ளடங்குகின்றன.
இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோருக்கான கூலி நரகம்தான் என நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.