«إِنَّ الْمُقْسِطِينَ عِنْدَ اللهِ عَلَى مَنَابِرَ مِنْ نُورٍ، عَنْ يَمِينِ الرَّحْمَنِ عَزَّ وَجَلَّ، وَكِلْتَا يَدَيْهِ يَمِينٌ، الَّذِينَ يَعْدِلُونَ فِي حُكْمِهِمْ وَأَهْلِيهِمْ وَمَا وَلُوا».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 1827]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்.
'நிச்சயமாக தன் குடும்பத்திலும் ஆட்சியிலும் அவர்கள் அதிகாரம் பெற்றவைகளிலும் நீதியாக நடக்கக் கூடியவர்கள் உயர்ந்தோனாகிய அர்ரஹ்மானின் வலப்புறத்திற்கு பக்கமாக அவனிடமுள்ள ஒளியிலான மேடைகளில் இருப்பார்கள் அவனின் இரு கைகளும் வலக்கரமாகும்'
தமது ஆட்சி, அதிகாரத்திற்குக் கீழிருக்கும் மக்கள் மத்தியில் நீதியாகவும், சத்தியத்தை கொண்டும்; தீர்ப்புச் செய்வோருக்கு கிடைக்கும் வெகுமதி குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்நபிமொழியில் குறிப்பிடுகிறார்கள். அவர்கள் மறுமையில் அல்லாஹ்விடம் ஒளியினாலான உயர்ந்த இருக்கைகளில், மேடைகளில் வீற்றிருப்பார்கள். இது அவர்களை மறுமையில் கௌரப்படுத்துவதற்காக அல்லாஹ் ஏற்படுத்தி வைத்துள்ள மிகப்பெரும் சன்மானமாகும். இந்த மேடைகள் அர்ரஹ்மானாகிய அல்லாஹ்வின் வலப்பக்கத்தில் காணப்படும். ஆனால் அவனின் இரு கைகளும் வலப்பக்கமாகும்