عن أبي هريرة رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول:
«حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ خَمْسٌ: رَدُّ السَّلَامِ، وَعِيَادَةُ الْمَرِيضِ، وَاتِّبَاعُ الْجَنَائِزِ، وَإِجَابَةُ الدَّعْوَةِ، وَتَشْمِيتُ الْعَاطِسِ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 1240]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் :
'ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்தாகும் : ஸலாத்திற்கு பதிலுரைத்தல், நோயுற்றறால் நலம் விசாரித்தல், மரணித்தால் அவரின் இறுதி சடங்கில் பின்துயர்தல், விருந்துக்கு அழைத்தால் பதிலளித்தல், தும்மி, அல்ஹம்து லில்லாஹ் எனக் கூறினால் பதிலுரைத்தல்'.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 1240]
இந்நபிமொழியில் ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய சில கடமைகள் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தெளிவுபடுத்துகிறார்கள். அந்தக்கடமைகளுள் முதலாவது ஒருவர் உமக்கு ஸலாம் கூறினால் அவருக்கு பதிலளித்தல் ஆகும்.
இரண்டாவது கடமை: நோயாளியை சுகம் விசாரித்தல்.
மூன்றாவது கடமை: ஜனாஸாவை வீட்டிருந்து தொழுமிடம் வரைக்கும்,தொழுமிடத்திலிருந்து அவரை அடக்கம் செய்யவதற்காக மக்பரா –அடக்கஸ்தளம் வரை பின்தொடரந்து செல்லுதல்.
நான்காவது கடமை : ஒருவர் வலீமா,மற்றும் வலீமா அல்லாத நிகழ்வுக்கு அழைப்பு விடுத்தால் அதற்கு பதில்அளித்தல்.
ஐந்தாவது கடமை : தும்மியவருக்கு பதிலளித்தல். அதாவது தும்மியவர் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறினால் அதனைக் செவிமடுத்தவர் யர்ஹமுகல்லாஹ் என்று கூறவேண்டும். அதற்கு தும்மியவர் யஹ்தீகுமுல்லாஹு வயுஸ்லிஹு பாலகும் என்று கூற வேண்டும்.