+ -

عن عُمر بن أبي سلمة رضي الله عنه قال:
كُنْتُ غُلَامًا فِي حَجْرِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَتْ يَدِي تَطِيشُ فِي الصَّحْفَةِ، فَقَالَ لِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا غُلَامُ، سَمِّ اللهَ، وَكُلْ بِيَمِينِكَ، وَكُلْ مِمَّا يَلِيكَ» فَمَا زَالَتْ تِلْكَ طِعْمَتِي بَعْدُ.

[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 5376]
المزيــد ...

உமர் இப்னு அபீ ஸலமா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
'நான் அல்லாஹ்வின் தூதர் அவர்களின் மடியில் வளர்ந்து வந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (அங்கும் இங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் என்னிடம், 'சிறுவனே! நீ அல்லாஹ்வின் பெயரைக் கூறி, உனது வலது கரத்தால், உனக்கு முன்னால் இருப்பதை சாப்பிடு' என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது'.

[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 5376]

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மனைவி உம்முஸலமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் புதல்வர், உமர் இப்னு அபீ ஸலமா ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள். - அவர் நபியவர்களின் கண்காணிப்பு மற்றும் வளர்ப்பின் கீழ் இருந்தவர்- அவர் உணவு உண்ணும் போது தனது கையை உணவை எடுப்பதற்காக அங்குமிங்கும் நகர்த்திக்கொண்டிருந்தார் அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உண்ணும் போது கடைபிடிக்கவேண்டிய மூன்று ஒழுக்கங்களை கற்பித்துக்கொடுத்தார்கள் அவை பின்வருமாறு:
முதலாவது : உண்ண ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹ் கூறுதல்.
இரண்டாவது: வலது கையால் உண்ணுதல்.
மூன்றாவது : உணவுத் தட்டில் தனக்கு அருகில் உள்ள பகுதியிலிருந்து சாப்பிடுதல்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜப்பான் بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية Юрба الليتوانية الدرية الصربية الصومالية Кинёрвондӣ الرومانية المجرية التشيكية الموري Малагашӣ Итолёвӣ Урумӣ Канада الولوف Озарӣ الأوكرانية الجورجية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. உண்ணல் பருகலின் போது ஆரம்பத்தில் பிஸ்மில் கூறுவது ஒழுக்கங்களின் ஒன்றாகும்.
  2. ஒருவரின் பராமரிப்பின் கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்பித்துக் கொடுத்தல் வேண்டும்
  3. சிறார்களுக்கு கற்பித்து நெறிப்படுத்துவதில் நபியவர்களின் இங்கிதமும் தயாள குணமும் இந்த ஹதீஸில் பிரதிபளிக்கின்றமை.
  4. உண்ணும் போது தனக்கு அருகில் உள்ளதை சாப்பிடுவது ஒழுக்கங்களில் ஒன்றாகும். ஆனால் குறிப்பிட்ட உணவு பல வகையானதாக இருப்பின் அவருக்கு விரும்பியதை எப்பகுதியிலிருந்தும் எடுத்து சாப்பிட அனுமதியுண்டு.
  5. நபியவர்கள் கற்றுக்கொடுத்து நெறிப்படுத்திய விடயத்தை தொடர்ந்தும் கடைப்பிடிக்கும் பண்பு ஸஹாபாக்களிடம் காணப்பட்டமை. அதனை நாம் ' உமர் அவர்களின் கூற்றான 'அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது'. என்பதிலிருந்து கற்றுக்கொள்கிறோம்.
மேலதிக விபரங்களுக்கு