+ -

عن أبي صِرْمة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال:
«مَنْ ضَارَّ ضَارَّ اللهُ بِهِ، وَمَنْ شَاقَّ شَقَّ اللهُ عَلَيْهِ».

[حسن] - [رواه أبو داود والترمذي وابن ماجه وأحمد] - [سنن الترمذي: 1940]
المزيــد ...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஸிர்மா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் :
யார் ஒரு முஸ்லிமிற்குத் தீங்கு இழைக்கின்றானோ, அல்லாஹ் அவனுக்கு தீங்கிழைப்பான். மேலும் எவன் ஒருவன் முஸ்லிமை சிரமத்தில் ஆழ்த்துகிறானோ, அல்லாஹ் அவனைக் சிரமத்தில் ஆழ்த்துவான்.

[ஹஸனானது-சிறந்தது] - - [سنن الترمذي - 1940]

விளக்கம்

முஸ்லிமுக்கு தீங்கை ஏற்படுத்துதல் அல்லது அவனது குடும்பம், சொத்து போன்ற ஏதாவது ஒரு விடயத்தில் சிரமத்தை ஏற்படுத்துதல் போன்றவனற்றை விட்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எச்சரிக்கிறார்கள். ஆகவே யார் ஒரு முஸ்லிமுக்கு தீங்கு செய்து, சிரமத்திற்குள்ளாக்குகின்றானோ அதைப்போன்ற தண்டனையை அல்லாஹ் தீங்கு செய்து சிரமப் படுத்தியவனுக்கு வழங்குகிறான்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية Юрба الليتوانية الدرية الصربية الصومالية Кинёрвондӣ الرومانية المجرية التشيكية Урумӣ Канада Озарӣ الأوزبكية الأوكرانية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. முஸ்லிமுக்கு தீங்கை ஏற்படுத்தி சிரமத்தை ஏற்படுத்துதல் ஹராமாகும்.
  2. பிறரால் பாதிக்கப்பட்ட தனது அடியார்களுக்குகாக அல்லாஹ் தண்டனை வழங்குகின்றமை.
மேலதிக விபரங்களுக்கு