عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ سِتٌّ» قِيلَ: مَا هُنَّ يَا رَسُولَ اللهِ؟، قَالَ: «إِذَا لَقِيتَهُ فَسَلِّمْ عَلَيْهِ، وَإِذَا دَعَاكَ فَأَجِبْهُ، وَإِذَا اسْتَنْصَحَكَ فَانْصَحْ لَهُ، وَإِذَا عَطَسَ فَحَمِدَ اللهَ فَسَمِّتْهُ، وَإِذَا مَرِضَ فَعُدْهُ وَإِذَا مَاتَ فَاتَّبِعْهُ».

[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2162]
المزيــد ...

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
"ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுக்கு செய்யவேண்டிய கடமைகள் ஆறு என நபியவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே அவை எவை எனக் கேட்கப்பட்டது ? அதற்கு நபியவர்கள் : ஒரு முஸ்லிமைச் சந்தித்தால் அவருக்கு ஸலாம் கூறுவீராக. அவர் உன்னை (விருந்துக்கு) அழைத்தால் அதற்கு பதிலளிப்பீராக. உன்னிடம் அறிவுரை கேட்டால் அவருக்கு அறிவுரை கூறுவீராக. அவர் தும்மி அல்ஹம்து லில்லாஹ் என்று கூறினால் அதற்கு யர்ஹமுகல்லாஹ் என்று கூறுவீராக. அவர் நோய்வாய்ப்பட்டால் அவரை சுகம் விசாரிக்கச் செல்வீராக. அவர் மரணித்துவிட்டால் அவரை அடக்கம் செய்வதற்காக பின்தொடர்ந்து செல்வாயாக என்று கூறினார்கள்".

[சரியானது] - [இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [முஸ்லிம் - 2162]

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஆறு என தெளிவு படுத்துகிறார்கள் அவை பின்வருமாறு : முதலாவது : ஒரு முஸ்லிமைச் சந்தித்தால் அஸ்ஸலாமு அலைக்கும் என வாழ்த்து கூற வேண்டும். அவர் அதற்கு வஅலைக்குமுஸ்ஸலாம் என பதில் கூறுவார். இரண்டாவது : வலீமா –திருமணவிருந்து- போன்ற முக்கிய நிகழ்வுகளுக்காக அழைத்தால் அவரின் அழைப்பை ஏற்று கலந்து கொள்ளுதல். மூன்றாவது: ஏதாவது ஒரு விடயத்தில் அறிவுரை கேட்டால் அவருக்கு மனதார அறிவுரை கூறுங்கள். இந்த விடயத்தில் அவருக்கு ஏதாவது சலுகைக் காட்டி உண்மையை மறைக்கவோ அல்லது ஏமாற்றவோ கூடாது. நான்காவது: அவர் தும்மிய பின் அல்ஹம்து லில்லாஹ் என்று கூறினால் அதற்கு யர்ஹமுகல்லாஹ் என்று கூறுங்கள். அதற்கவர் யஹ்தீகுமுல்லாஹ் வயுஸ்லிஹு பாலகும் என்று பதிலுரைப்பார். ஐந்தாவது : அவர் நோய்வாய்ப்பட்டால் அவரை சுகம் விசாரியுங்கள். ஆறாவது : அவர் மரணித்துவிட்டால் அவருக்கு தொழுகை நடாத்தி அவரை அடக்கம் செய்யும் வரை அவரின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்வது.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. இமாம் ஷவ்கானி குறிப்பிடுகையில் (முஸ்லிமின் கடமை) என்பதன் கருத்து அதை செய்யாது விட்டு விடக் கூடாது என்பதாகும். அதாவது இக்கடமைகள் யாவும் ஒன்றில் கடமை (வாஜிப்) என்ற நிலையில் அல்லது (ஸுன்னா முஅக்கதா ) வலியுறுத்தப்பட்ட ஒரு ஸுன்னா நிலையில் உள்ள தவிர்க்க முடியாத கடமைகளாகும் என்று குறிப்பிடுகிறார்.
  2. ஸலாம் கூறப்பட்டவர் தனிநபராக இருப்பின் அதற்கு பதில் கூறுவது பர்ழ் அய்ன் ஆகும். ஆனால் ஒரு கூட்டமாக இருந்தால் அதில் இருக்கும் ஒருவர் பதில் கூறினாலும் போதுமானதாகும். ஆனால் அடிப்படையில் ஸலாத்தை ஆரம்பிப்பது ஒரு ஸுன்னாவாகும்.
  3. நோயாளியை சுகம் விசாரிக்கச் செல்வது தனது சகோதர முஸ்லிம்களுக்குரிய உரிமையை பேணுவதாகும். இவ்வாறு சுகம் விசாரிக்கச் செல்வது அவர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியையும் ஆறுதலையும் ஏற்படுத்தும். இது ஒரு பரழ்கிபாயாவான சமூகக் கடமையாகும்.
  4. பாவம் இடம்பெறாத நிலையில் உள்ள அழைப்பை ஏற்பது கடமையாகும். அது திருமண விருந்து (வலீமா) அழைப்பாக இருந்தால், ஷரீஅத் அடிப்படையிலான காரணம் (உகந்த காரணம்) இல்லையெனில் அதை ஏற்பது கடமையென பெரும்பான்மையான அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால், அது திருமண விருந்து அல்லாத பிற அழைப்பாக இருந்தால், அதை ஏற்பது பரிந்துரைக்கப்பட்ட (முஸ்தஹப்) செயலாகும் என்று பெரும்பான்மையான அறிஞர்கள் கருத்து கூறுகின்றனர்.
  5. தும்மியவர் அல்ஹம்துலில்லாஹ் கூறியதை கேட்டால் அதற்கு யர்ஹமுகல்லாஹ் என்று கூறுவது வாஜிப் ஆகும்.
  6. சமூக உறுப்பினர்களிடையே சமூகத்தின் பிணைப்பை உறுதிப்படுத்தி நம்பிக்கை மற்றும் அன்பின் அடிப்படையிலான உறவுகள் பராமரிக்கப்பட வேண்டும் என்பதில் இஸ்லாமிய மார்க்கம் ஆர்வம் கொள்வதுடன் அதன் பரிபூரணதன்மைக்கு சான்றாகவும் இந்த ஹதீஸ் காணப்படுகிறது.
  7. இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள(فَسَمِّتْهُ) என்ற வார்த்தையானது சில பிரதிகளில்;: 'فَشِمِتهُ' என்று அதாவது سين மற்றும் شَين ஆகிய இரண்டு நிலையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் கருத்து நன்மை மற்றும் அருள்வலம் கிடைக்கப் பிரார்த்தித்தல் என்பதாகும் மேலும் تشمِته என்பதன் பொருள்: உமது எதிரி உமக்கேட்பட்ட துன்பத்தில் மகிழ்ச்சியடையும் ஒன்றிலிருந்தும் அல்லாஹ் உம்மைப் பாதுகாக்கட்டும் என்பதாகும். மேலும் التسميت என்பதன் பொருள்: அல்லாஹ் உங்களை நேரான பாதைக்கு வழிநடத்துவானாக என்பதாகும்.
மொழிபெயர்ப்பைக் காண
மொழி: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி மேலதிக விபரங்களுக்கு (44)
மேலதிக விபரங்களுக்கு