பிரிவுகள்: . . .
+ -
عن أبي بكرة رضي الله عنه قال: قال النبي صلى الله عليه وسلم:

«‌أَلَا ‌أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ؟» ثَلَاثًا، قَالُوا: بَلَى يَا رَسُولَ اللهِ، قَالَ: «الْإِشْرَاكُ بِاللهِ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ» وَجَلَسَ وَكَانَ مُتَّكِئًا، فَقَالَ: «أَلَا وَقَوْلُ الزُّورِ»، قَالَ: فَمَا زَالَ يُكَرِّرُهَا حَتَّى قُلْنَا: لَيْتَهُ سَكَتَ.
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 2654]
المزيــد ...

அபூபக்ரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'பாவங்களில் மிகப்பெரியது குறித்து உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா?' என்று மூன்று முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தோழர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள்; 'ஆம் அல்லாஹ்வின் தூதரவர்களே!' எனக் கூறினார்கள். அப்போது, 'அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோரைத் துன்புறுத்தல்' என்று கூறினார்கள். பின்னர் சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, 'அறிந்து கொள்ளுங்கள்; பொய் பேசுவதும், (மிகப் பெரிய பாவம்தான்)' என்று கூறினார்கள். இந்த வார்த்தையை கூறுவதை நிறுத்த மாட்டார்களா ? என்று நாம் கூறும் அளவுக்கு அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள்.

الملاحظة
Anaya babaya itaatsizlik oradaki itaatsizlik kelme manası ozamanda kullanılan alanı kastedilen kavram bunu biraz daha anlamak lazım. Egosu yüzünden evlatlarını hasta eden anababalarla dolu bir toplumda yaşıyoruz. Çocuk bunu 40 yaşında ya anlıyor ya anlamıyor ona dönüşüyor. Yani Bi usul olmalı. Yanlışları dayattıkları bizi hasta etmeyecek ve onlara sınır çizerken incitmeyecek bir usul bu belirlenmeden itaat kelimesi çok ağır yük.
النص المقترح وَعُقُوقُ
الملاحظة
123456789
النص المقترح فارسی

[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 2654]

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது தோழர்களுக்கு மிகப் பெரும்பவாங்கள் குறித்து தெரிவித்தார்கள். அதில் அவர்கள் மூன்று பாவங்கள் குறித்து பிரஸ்தாபித்தார்கள் அவை பின்வருமாறு:
முதலாவது அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல் : அதாவது வணக்க வழிபாடுகளின் வகைகளுள் ஏதாவது ஒன்றை அல்லாஹ் அல்லாத ஒன்றிற்கு சமர்பித்தல்.மேலும் அல்லாஹ்வின் இறைமைத்துவம் (உலூஹிய்யா) , ருபூபிய்யா மற்றும் அவனின் திருநாமங்கள் பண்புகளில் அல்லாஹ்வை அல்லாஹ் அல்லாதவற்றுடன் நிகராக்குதல் போன்றவற்றை இது குறித்து நிற்கிறது.
இரண்டாவது : பெற்றாருக்கு நோவினை செய்தல் என்பது சொல் மற்றும் செயல் ரீதியான அனைத்து விடயங்கள் மூலமும் பெற்றோரை துன்புறுத்துவதையும் அவர்களுக்கு உபகாரம் செய்யாதிருத்தலையும் குறிக்கிறது.
பொய் பேசுதல் என்பதில் பொய் சாட்சியம் கூறுவதும் அடங்கியுள்ளது. பொய்ச் பேசுதல் என்பது : ஒருவருடைய பொருளாதாரத்தை உரிமையின்றி சுரண்டுவதற்காகவோ, அவருடைய மானத்தில் அத்துமீறுவதற்காகவோ பொய்யாக சோடிக்கப்பட்ட அனைத்து வித வார்த்தை களையும் உள்ளடக்குகின்ற ஒரு பொதுவான சொற் பிரயோகமாகும்.
பொய் பேசுதல் ஒரு அசிங்கமான விடயம் மற்றும் அது சமூகத்தில்; மோசமான தாக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை உணர்த்தவே நபியவர்கள் பல முறை எச்சரித்து இவ்வார்த்தையைக் குறிப்பிட்டார்கள். இவ்வாறு பல முறை சொல்வதைக் கேட்ட ஸஹாபாக்கள் நபியவர்கள் மீது கொண்ட பரிவினாலும், அசௌகரியம் ஏற்படக் கூடாது என்பதனாலும் நபியவர்கள் இதனைக் கூறுவதை நிறுத்த மாட்டார்களா என அவர்கள் தங்களுக்கு மத்தியில் பேசிக்கொண்டார்கள்.

الملاحظة
Türkiye
النص المقترح لا يوجد...

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. பாவங்களில் மிகக்கொடுமையானது அல்லாஹ்வுக்கு இணைவைப்பதாகும், ஏனெனில் நபியவர்கள் இதனைத் தான் பாவங்களின் தலையாததாகவும் மிகப் பெரியதாகவும் ஆக்கியுள்ளார்கள்.' அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்க மாட்டான், அதுவல்லாததைத் தான் நாடியோருக்கு மன்னிக்கின்றான்' என்ற இறைவசனம் இதனை இன்னும் உறுதிப்படுத்துகின்றது.
  2. பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகளின் மகிமை இங்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளமை, ஏனெனில் அதனை அல்லாஹ் தனக்கு செய்ய வேண்டிய கடமையுடன் சேர்த்துக் கூறியுள்ளான்.
  3. பாவங்களை பெரும்பாவங்கள், சிறுபாவங்கள் என இரண்டாக வகைப்படுத்திடமுடியும்;. அதில் பெரும்பாவம் என்பது குறிப்பிட்ட செயலைச் செய்தால் சாபம் ஏற்படுதல், மற்றும் குறிப்பிட்ட குற்றங்களுக்கு ஷரீஆ நிர்ணயித்திருக்கும் உலகியல்; தண்டனை கிடைத்தல், அல்லது நரகத்தினுள் நுழைதல் என்ற மறுமை எச்சரிக்கையை வலியுறுத்தும் அனைத்துப் பாவங்களையும் குறிக்கும். பெரும்பாவங்கள் பல படித்தரங்களைக் கொண்டவ, அவற்றில் சில சிலவற்றைவிடவும் மிகவும் கண்டனத்திற்குரிய கடுமையாக தடைசெய்யப்பட்டவையாக உள்ளன. பெரும்பவங்களைத் தவிர்ந்தவை அனைத்தும் சிறு பாவங்களாகும்.
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية Юрба الليتوانية الدرية الصربية الصومالية Кинёрвондӣ الرومانية المجرية التشيكية الموري Малагашӣ Итолёвӣ Урумӣ Канада الولوف البلغارية Озарӣ الأوكرانية الجورجية المقدونية
மொழிபெயர்ப்பைக் காண
பிரிவுகள்
  • . .
  • . .
மேலதிக விபரங்களுக்கு