«إِذَا أَنْفَقَ الرَّجُلُ عَلَى أَهْلِهِ يَحْتَسِبُهَا فَهُوَ لَهُ صَدَقَةٌ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 55]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :
'நன்மையை எதிர்பார்த்து ஒரு மனிதன் தனது குடும்பத்திற்கு செலவு செய்தால், அது தர்மமாக அமையும்'.
[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [புஹாரி - 55]
ஒரு மனிதர் தனது மனைவி, பெற்றோர் பிள்ளைகள் போன்ற தன்மீது செலவு கடமையான குடும்பத்தார்க்கு அல்லாஹ்வை நெருங்கி, அவனிடம் நன்மையை எதிர்பார்த்து செலவு செய்தால் அவருக்கு தர்மம் செய்த நன்மை கிடைக்கிறது என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெரிவிக்கிறார்கள்.