«لَيْسَ الشَّدِيدُ بِالصُّرَعَةِ، إِنَّمَا الشَّدِيدُ الَّذِي يَمْلِكُ نَفْسَهُ عِنْدَ الْغَضَبِ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 6114]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்:
'(பிறரை)அடித்து வீழ்த்துபவன் வீரனல்ல. உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்'.
உண்மையான வலிமை என்பது உடல் வலிமையோ, அல்லது பலசாலியை வீழ்த்துவதோ அல்ல. மாறாக மிகப்பெரும் பலசாலி என்பவன் கடுமையான கோபத்தின் போது தனது உள்ளத்துடன் போராடி கட்டுப்படுத்துபவனே என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லாம் அவர்கள் தெளிவு படுத்துகிறார்கள். ஏனெனில் இது தன்னைக் கட்டுப்படுத்தி அவனிடமுள்ள ஷைத்தானை வெற்றி கொள்ளும் அவனது ஆற்றலைப் பறைசாற்றுகின்றது.