كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ كِلاَنَا جُنُبٌ، وَكَانَ يَأْمُرُنِي، فَأَتَّزِرُ، فَيُبَاشِرُنِي وَأَنَا حَائِضٌ، وَكَانَ يُخْرِجُ رَأْسَهُ إِلَيَّ وَهُوَ مُعْتَكِفٌ فَأَغْسِلُهُ وَأَنَا حَائِضٌ. المزيد
உம்முல் முஃமினீன ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்:
பெருந்துடக்குடன் இருந்த நானும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து (தண்ணீர் அள்ளிக்) குளிப்போம். எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை (துணி கட்டிக்கொள்ளுமாறு) பணிப்பார்கள். அவ்வாறே நான் கீழாடை அணிந்து கொள்வேன். அப்போது அவர்கள் என்னை அணைத்துக் கொள்வார்கள் . நபியவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசல்) 'இஃதிகாஃப்' இருந்த போது, அங்கிருந்தவாறே (அருகிலிருக்கும் அறையிலிருந்த) என் பக்கம் தலையை நீட்டுவார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள நிலையிலும் நான் அவர்களது தலையைக் கழுவிவிடுவேன்.