«الدُّنْيَا مَتَاعٌ، وَخَيْرُ مَتَاعِ الدُّنْيَا الْمَرْأَةُ الصَّالِحَةُ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 1467]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லஹ் இப்னு அம்ர் இப்னுல்ஆஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவித்துள்ளார்கள்:
'இவ்வுலகம் (முழுவதும்) தற்காலிக இன்பமே, இவ்வுலக இன்பங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே'.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 1467]
இந்த உலகமும் அதிலுள்ளவைகளும் சொற்பகால தற்காலிக இன்பமாகும். பின்னர் அவை அழிந்துவிடும் எனவும் அவ்வாறான இன்பங்களில் மிகவும் சிறப்புக்குரியது ஸாலிஹான மனைவியே எனவும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெரிவித்துள்ளார்கள். ஸாலிஹான அவனின் மனைவியை அவன் பார்த்தால் அவனை அவள் சந்தோசப்படுத்துவாள். அவளுக்கு ஏதாவது ஒரு காரியத்தை செய்து தருமாறு கட்டளையிட்டால் அவனுக்கு கட்டுப் படுவாள், அவன் வீட்டில் இல்லாத போது தன்னையும் கணவனின் சொத்துக்களையும் பாதுகாப்பாள்.