عن النعمان بن بشير رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: «إن الدعاء هو العبادة». ومن حديث أنس رضي الله عنه بلفظ: «الدعاء مُخُّ العبادة».
[حديث النعمان بن بشير: صحيح. حديث أنس بن مالك: ضعيف] - [حديث النعمان -رضي الله عنه-: رواه أبو داود والترمذي وابن ماجه وأحمد. حديث أنس -رضي الله عنه-: رواه الترمذي]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக நூஃமான் பின் பஷீர் (ரலி) கூறுகின்றார்கள் : "பிரார்த்தனையே (துஆவே) ஒரு வணக்கமாகும்". நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) கூறுகின்றார்கள் : "பிரார்த்தனையே (துஆவே) வணக்கத்தின் உயிராகும்".
ஸஹீஹானது-சரியானது - இதனை இப்னு மாஜா பதிவு செய்துள்ளார்

விளக்கம்

துஆவே ஒரு வணக்கம் எனும் வார்த்தை அல்லாஹ்வை அழைத்துப் பிரார்த்திப்பது தான் அவனது படைப்பினங்கள் அவனை வழிபடுவதில் அடிப்படையாகும் என்பதை அறிவிக்கின்றது. ஏனெனில் ஒரு மனிதனின் எதிர்ப்பார்ப்பு அல்லாஹ் அல்லாதவர்களிடம் இருந்து அறுந்து, தனது இயலாமையை வெளிப்படுத்தி, துஆவின் மூலம் அவனை ஒருமைப் படுத்தி, அவனது இதயம் அல்லாஹ்வன்றி வெறு எங்கும் திரும்பாமல் இருந்தால் அவன் அல்லாஹ்வின் பரிபூரணத்துவத்தையும், அவன் துஆவிற்குப் பதிலளிப்பான், கேட்பவன், சமீபத்திலுள்ளவன், அனைத்திற்கும் ஆற்றலுள்ளவன் என்பதை ஏற்றுக் கொண்டவனாவான். இதுதான் வணக்கத்தின் யதார்த்தமும், ஓரிறைக் கொள்கையின் சாரம்சமுமாகும். "பிரார்த்தனையே (துஆவே) வணக்கத்தின் உயிராகும்" என்பதன் அர்த்தம் வணக்கத்தின் தூய்மையான வடிவம், உயிர்நாடி பிரார்த்தனையாகும், மனிதன் உயிரின்றி நிலைக்க முடியாது என்பது போன்று பிரார்த்தனையின்றி வணக்கம் நிலைக்க மாட்டாது.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. பிரார்த்தனை என்பது வணக்கத்தின் மிகப்பெரிய வடிவமாகும்.
  2. பிரார்த்தனைதான் வணக்கத்தின் அடிப்படையாகவும், உயிர்நாடியாகவும் உள்ளது. அதுவன்றி வணக்கம் நிலைக்க மாட்டாது.
  3. பிரார்த்தனையை ஊக்குவித்தல்.
  4. அல்லாஹ்வை நினைவுகூர்தல், அவனிடம் பணிந்து செல்லல் போன்றன உள்ளதால் அனைத்து வேளையும் பிரார்த்தனையைத் தூண்டுதல்.
  5. அடிமைத்தனத்தின் யதார்த்தம், அல்லாஹ்வின் தன்னிறைவு, வல்லமையை ஏற்றுக்கொள்ளல், அடியான் அவன்பால் தேவையுடையவன் என்பதை பிரார்த்தனை உள்ளடக்குகின்றது.
  6. பிரார்த்தனை ஓர் அடியானைத் தனது இறைவனிடம் அதிக நெருக்கத்தை ஏற்படுத்துவதுடன், அவனது கடமை, அனைத்தையும் சூழ்ந்தறியும் அவனது அறிவு, அடியானின் இயலாமை என்பவற்றை ஏற்றுக் கொள்வதையும் அதிகரிக்கின்றது.
மேலதிக விபரங்களுக்கு