+ -

عن عمر بن الخطاب رضي الله عنه مرفوعاً: «إنما الأعمال بِالنيَّات، وإنما لكل امرئ ما نوى، فمن كانت هجرتُه إلى الله ورسوله فهجرتُه إلى الله ورسوله، ومن كانت هجرتُه لدنيا يصيبها أو امرأةٍ ينكِحها فهجرته إلى ما هاجر إليه».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
'செயல்கள் அனைத்தும் எண்ணத்தைக் கொண்டே அமைகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் தாம் எண்ணியதற்கேட்பவே கூலி கிடைக்கிறது. ஆகவே ஒருவர் இறைவனுக்காகவும் அவனது திருத்தூதருக்காகவும் ஹிஜ்ரத் செய்வாரேயானால் அது அல்லாஹ்வுக்காகவும் அவனது திருத்தூதருக்காகவுமே இருக்கும். ஒருவர் ஹிஜ்ரத் செய்வது சில உலக இலாபங்களுக்காக என்றால், அல்லது ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற் காகத்தான் என்றால் அவர் அதற்கான பலனையே அடைவார். இமாம் புஹாரியின் அறிவிப்பில் ' செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும்; தாம் எண்ணியதற்கேட்பவே கூலி கிடைக்கிறது' என்று இடம்பெற்றுள்ளது.

[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح مسلم - 1907]

விளக்கம்

இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அனைத்து செயற்பாடுகளும் நிய்யத்தைக் கொண்டே கணிக்கப்ப்படுவதாக தெளிவுபடுத்துகிறார்கள். இந்த சட்டமானது வணக்கங்கள் நடைமுறை சார்ந்த விடயங்கள் அனைத்திற்கும் பொதுவானது. யார் தனது செயற்பாட்டினூடாக உலகியல் நலனை நாடினால் அவர் அதை மாத்திரமே அடைந்துகொள்வார். அவருக்கு எந்த கூலியும் கிடையாது. யார் தனது செயற்பாடுகளினூடாக அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் செயற்படுகிறரோ, அவரின் அந்த செயலுக்கு வெகுமதியும் கூலியும் கிடைக்கும். குறிப்பிட்ட அந்த செயல் குடித்தல் சாப்பிடுதல் போன்ற அன்றாட செயல்களாக இருந்தாலும் சரியே.
வெளிப்படையில் குறித்த செயலானது ஒரே மாதிரியாக இருந்தாலும் நிய்யத் -எண்ணமானது எந்தளவிற்கு தாக்கம் செலுத்துகிறது என்பதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு உதாரணத்தைக் குறிப்பிடுகிறார்கள். அவர்கள் குறிப்பிடுகையில் யார் அல்லாஹ்வின் திருப்தியை மாத்திரமே நாடி தனது தாயகத்தை துறந்து (ஹிஜ்ரத்) செல்கிறரோ அவரின் ஹிஜ்ரத் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹிஜ்ரத்தாகும். அவரின் உண்மையான நிய்யத்திற்கு கூலி வழங்கப்படும். யார் தனது ஹிஜ்ரத்தின் போது உலகியல் நலன்களான செல்வம், அல்லது புகழ் அல்லது வியாபாரம் அல்லது மனைவி போன்ற விடயங்களை அடைந்து கொள்ளும் நோக்கில் சென்றிருந்தால் அவரின் நிய்யத்தில் (எண்ணத்தில்) அவர் அடைந்து கொள்ள விரும்பும் நலனைத் தவிர வேறு எதனையும் அடைந்து கொள்ளமாட்டார். அவருக்கு எந்த வெகுமதியோ கூலியோ கிடைக்காது என நபியவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية Юрба الليتوانية الدرية الصربية الصومالية الطاجيكية Кинёрвондӣ الرومانية المجرية التشيكية Малагашӣ Итолёвӣ Урумӣ Канада Озарӣ الأوزبكية الأوكرانية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. எண்ணத்தில் தூய்மையை கடைப்பிடிக்க ஆர்வ மூட்டப்பட்டிருத்தல். ஏனெனில் அல்லாஹ்வின் திருமுகம் நாடி செய்யாத எந்த அமலும் ஏற்றுக்ககொள்ளப்படுவதில்லை.
  2. அல்லாஹ்வை நெருங்குவதற்கான அமல்களை –செயற்பாடுகளை- அடியான் அன்றாட செயற்பாடாகக் கருதி எவ்வித நோக்கமுமின்றி செய்தால் அதற்கான எந்த கூலியும் கிடையாது. எப்போது அந்த அமல்களை அல்லாஹ்வை நெருங்கும் நோக்கில் செய்கிறானோ அப்போது அதற்குரிய கூலி கிடைக்கிறது.
மேலதிக விபரங்களுக்கு