ஹதீஸ் அட்டவணை
1. நபி (ஸல்) அவர்கள், தாம் காலணி அணிந்து கொள்ளும் போதும் தலைவாரிக் கொள்ளும் போதும் சுத்தம் செய்யும் போதும் தம் அனைத்து வேலைகளிலும் வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
2. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், தமது சிறுநாக்குத் தென்படும் அளவு வாயைத் திறந்து பலமாக சிரித்ததை நான் கண்டதில்லை. மாறாக, புன்முறுவலாகவே சிரிப்பார்கள் - 2 ملاحظة
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
3. உங்களுக்கு எதிராக துஆ செய்யாதீர்கள்.உங்களின் குழந்தைகளுக்கு எதிராகவும் துஆ செய்யாதீர்கள், இவ்வாறு துஆ செய்வதன் மூலம் நீங்கள் அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டு உங்களுக்கு அவன் துஆ ஏற்கின்ற அந்த நேரத்திற்கு உட்பட்டு வேண்டாம்.
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
4. ஒரு மனிதர் விருப்பமான ஒரு கனவைக் கண்டால், அது அல்லாஹ்விடமிருந்தே வந்துள்ளது. எனவே, அவர் அதற்காக அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, அதை (மக்களுக்குக்) கூறவும். அவ்வாறல்லாமல் வெறுக்கும் ஏதாவதொன்றைக் கண்டால், அது ஷைத்தானிடமிருந்தே வரும். அதன் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவதுடன், யாரிடமும் அதைக் கூறாமலிருக்கட்டும். அப்போது, அது அவருக்கு எந்தத் தீங்கையும் ஏற்படுத்தமாட்டாது
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
5. “யார் இரு பெண் பிள்ளைகளை பருவ வயது வரை பொறுப்பேற்று, வளர்க்கின்றாரோ, அவர் மறுமையில் என்னோடு இப்படி வருவார்” என்று கூறிவிட்டு தமது விரல்களை இணைத்துக்காட்டினார்கள்
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
6. விசுவாசிகளுக்கு - அல்லது என்னுடைய சமுதாயத்திற்கு- சிரமமாக இருக்கும் என்று இல்லையென்றிருந்தால், ஒவ்வொரு தொழுகையின் போதும் பல் துலக்குமாறு அவர்களைக் கட்டாயப்படுத்தியிருப்பேன்
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
7. அடியார்கள் காலையை அடையும் ஒவ்வொரு நாளிலும், இரு மலக்குகள் இறங்கி, ஒருவர் "யா அல்லாஹ்! தர்மம் கொடுப்பவருக்கு பதிலாக மேலும் கொடுப்பாயாக" என்றும், மற்றவர், "யா அல்லாஹ்! தர்மம் செய்யாமல் வைத்துக்கொள்பவருக்கு அழிவைக் கொடுப்பாயாக" எனவும் பிரார்த்திப்பார்கள்
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
8. “இயன்றவரை சரியான அமல்களையே செய்யுங்கள். உங்களில் யாரும் தனது அமல்களால் மாத்திரம் தப்பிக்கமுடியாது என்பதை அறிந்துகொள்ளுங்கள்” அப்போது நபித்தோழர்கள், “நீங்களுமா? அல்லாஹ்வின் தூதரே” எனக் கேட்டபோது, “நானும் தான். அல்லாஹ் தனது அருளாலும், பேருபகாரத்தாலும் என்னை மறைத்துக் கொண்டாலே தவிர (என்னாலும் தப்பமுடியாது)” என்று கூறினார்கள்
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
9. யா அல்லாஹ்! உன் திருப்தியைக் கொண்டு உனது கோபத்தை விட்டும், உன்னிடமுள்ள ஈடேற்றத்தைக் கொண்டு உன் தண்டனையை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன். உன்னைக் கொண்டே, உன்னை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன். நீ உன்னைப் புகழ்ந்தது போல, என்னால் உன்னைப் புகழ்ந்து முடிக்க முடியாது - 2 ملاحظة
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
10. 'சுவனவாதிகளை உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா? பலவீனமான, பணிவாக நடக்கும் ஒவ்வொருவரும் (சுவனவாதிகள் தாம்). அல்லாஹ்வின் மீது அவர்கள் சத்தியம் செய்து விட்டால், அதை அல்லாஹ் நிறைவேற்றிவிடுவான். நரகவாதிகளை உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா? வன்மையான, பெருமைபிடித்த, கர்வம் கொண்ட ஒவ்வொருவரும் (நரகவாதிகள் தான்)'
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
11. ‘‘எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும், ஷைத்தானைவிட்டு அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்’ (அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தான்) என்று இவர் பிரார்த்தித்தால் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும்”
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
12. நல்ல கனவுகள் அல்லாஹ்விடமிருந்து வருபவையாகும். கெட்ட கனவுகள் ஷைத்தானிடமிருந்து வருபவையாகும். உங்களில் யாராவது பயங்கரமான ஓர் கெட்ட கனவைக் கண்டால், தனது இடப்பக்கம் உமிழ்ந்துவிட்டு, அதன் தீங்குகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கேட்கட்டும். அப்போது அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தமட்டாது
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
13. நான், 'அல்லாஹ்வின் தூதரே! வெற்றி எவ்வாறு?' எனக் கேட்டபோது, 'உனது நாவை உன் கட்டுப்பாட்டுள் வைத்துக்கொள்! உனது வீடு உனக்கு விசாலமாக இருக்கட்டும், உன் பாவங்களை நினைத்து அழு' என்று பதிலளித்தார்கள் நபியவர்கள்
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
14. என் அடியான் என்னைப் பற்றி நினைக்கும் இடத்தில் நான் உள்ளேன். அவன் என்னை நினைவுபடுத்தும் போது நான் அவனோடு உள்ளேன் - 6 ملاحظة
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
15. நான் ஆஇஷா (ரழி) அவர்களிடம், “நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வீட்டினுள் நுழைந்ததும் முதலில் என்ன செய்வார்கள்?" எனக் கேட்டதற்கு, "பல் துலக்குவார்கள்" என்றார்கள் அவர்கள்
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
16. இரவிலிருந்து காலை வரை உறங்கிய ஒரு மனிதரைப் பற்றி நபியவர்களிடம் கூறப்பட்ட போது, "அம்மனிதனின் இரு காதுகளிலும் (அல்லது ஒரு காதில்) ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்." என்று கூறினார்கள்
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
17. நபி (ஸல்) அவர்கள் இறுதி பத்துத் தினங்களிலும் ஏனைய தினங்களில் இல்லாத அளவு முயற்சிப்பார்கள்
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
18. ஓர் அடியான் இன்னோர் அடியானின் குறையை மறைத்தால், அல்லாஹ் மறுமையில் அவரின் குறையை மறைப்பான்
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
19. உங்களில் எவரும் அல்லாஹ்வைப் பற்றிய நல்லெண்ணம் கொண்ட நிலையிலேயே தவிர மரணிக்கவேண்டாம்
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
20. 'நீங்கள் கூறுவது போன்றே நீங்கள் இருந்தால், அவர்களது வாய்களில் சூடான சாம்பலைப் போடுவது போன்ற வேலையையே நீங்கள் செய்கின்றீர்கள். நீங்கள் இவ்வாறே இருக்கும் காலமெல்லாம் அவர்களுக்கெதிராக உங்களுக்கு உதவும் ஒருவர் அல்லாஹ்வின் புறத்திலிருந்து இருந்துகொண்டே இருப்பார்.'
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
21. ஓர் அடியானின் இரு கால் பாதங்களுக்கும் அல்லாஹ்வின் பாதையில் புழுதி படிந்தால், அவற்றை நரகம் தீண்டமாட்டாது
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
22. ((ஒரு கூட்டத்தினர் தாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் அல்லாஹ்வை (திக்ர்) நினைவுகூறாமல் எழுந்து செல்வது செத்த கழுதையை விட்டும் எழுந்து செல்வது போலாகும் . அது அவர்களுக்குக்கு (மறுமையில்) பேரிழப்பாக அமையும்))
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
23. 'தனது ரப்பை நினைவுகூறுபவனுக்கும், தனது ரப்பை நினைவுகூறாதவனுக்கும் உதாரணம், உயிருள்ளவனும் உயிரற்றவனும் ஆகும்
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
24. “எனக்குப் பின் உங்களுக்கிடையே உலக வளங்களும் அதன் கவர்ச்சிப் பொருட்களும் தாராளமாகத் திறந்துவிடப்படுவதைப் பற்றியே நான் அஞ்சுகிறேன்” - 2 ملاحظة
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
25. யாராவது ஒருவருக்கு, அல்லாஹ் தன்னை மறுமையின் துன்பங்களில் இருந்து பாதுகாப்பது மகிழ்ச்சியைத் தரும் என்றிருந்தால், அவர் கஷ்டத்தில் இருக்கும் ஒரு கடனாளிக்கு அவகாசம் கொடுக்கட்டும், அல்லது தள்ளுபடி செய்யட்டும்
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
26. நரகவாதிகளில் குறைந்த தண்டனை உள்ளவர், நெருப்பினால் ஆன இரு செருப்பக்களும், இரு செருப்பு வார்களும் உள்ளவராவார். இவ்விரண்டின் காரணமாக அவரது மூளை, செம்புச் சட்டிகள் கொதிப்பது போன்று கொதிக்கும். அவரை விடக் கடுமையான வேதனைகொண்ட யாரும் இருக்கமாட்டார்கள் என்று அவர் நினைப்பார். ஆனாலும், அவர்தான், மிகைக்குறைந்த தண்டனை உரியவர்
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
27. “இறைநம்பிக்கையாளர் அவருடைய இறைவனுக்கருகில் கொண்டுவரப்படுவார். அப்போது அவர்மீது அவன் தன் திரையைப் போட்டு மறைத்துவிடுவான். அப்போது அவர் தாம் செய்த பாவங்களை ஒப்புக்கொள்ள வைப்பான்
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
28. அதற்கு நபியவர்கள் 'உலக வாழ்க்கையில் பற்றற்றவராக இருங்கள், அல்லாஹ் உம்மை நேசிப்பான். மக்களிடம் இருப்பவற்றில் ஆசைகொள்ளாதீர்கள், அவர்கள் உம்மை நேசிப்பார்கள்.' எனப்பதிலளித்தார்கள்
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
29. 'நன்மை என்பது நற்குணமாகும். பாவம் என்பது உனது உள்ளத்தில் குறுகுறுப்பை ஏற்படுத்தும். மக்கள் அதைக் காண்பதை நீ வெறுப்பாய்
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
30. நாளை மறுமை நாளில் நரகம் கொண்டு வரப்படும் போது அதில் எழுபதாயிரம் கடிவாளங்கள் இடப்பட்டிருக்கும்.ஒவ்வொரு கடிவாளத்தையும் எழுபதாயிரம் மலக்குகள் இழுத்துக் கொண்டு வருவர். - 1 ملاحظة
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
31. எழுது கோள் மூவரை விட்டும் உயர்தப்படுகிறது: (மூவரின் செயல்கள் பதியப்படுவதில்லை) தூங்குபவர் விழித்தெழும்வரை, சிறுவன் பருவவயதை அடையும் வரை, புத்திசுவாதின மற்றவர் அவரின் புத்தி தெளியும் வரை - 2 ملاحظة
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
32. “இறைவழியில் (அறப்போருக்குச் செல்லும்போது) ஒரு நாள் நோன்பு நோற்றவரின் முகத்தை, அல்லாஹ் நரக நெருப்பைவிட்டு எழுபது ஆண்டுகள் (பயணத்) தொலைவிற்கு அப்புறப்படுத்தி விடுவான்.”
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
33. 'நோன்பு திறப்பதை (தாமதிக்காது) அவசரப்படுத்தும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் (நலவிலே) நிலைத்திருக்கிறார்கள்
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
34. 'நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சிறியவர், பெரியவர், சுதந்திரமானவர், அடிமை ஆகிய அனைவர் மீதும் ஒரு ஸாஉ உணவு அல்லது ஒரு ஸாஉ பாலாடைக் கட்டி அல்லது ஒரு ஸாஉ அளவு பேரீச்சம் பழம், அல்லது ஒரு ஸாஉ அளவு தொலி நீக்கப்படாத கோதுமை, அல்லது ஒரு ஸாஉ உலர்ந்த திராட்சை
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
35. நாம் அல்லாஹ்வின் தூதரோடு ஸஹ்ர் செய்தோம். பின்னர் அவர்கள் தொழுகைக்காக சென்றார்கள். நான் ஸைதிடம் அதானுக்கும் ஸஹ்ர் உணவுக்குமிடையில் எவ்வளவு இடைவெளி இருந்ததென கேட்டேன். அதற்கு ஐம்பது ஆயத்துக்கள் அளவு என்றார்கள் என அனஸ் அறிவிக்கிறார்கள்
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
36. “நபியவர்கள் மரணிக்கும் வரையில் ரமழானில் இறுதிப்பத்தில் இஃதிகாப் இருந்து வந்தார்கள். அவர்களுக்குப் பின்னர் அவர்களது மனைவியர் இஃதிகாப் இருந்தார்கள்”
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
37. ஸஹ்ர் செய்யுங்கள். நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பறக்கத் (அபிவிருத்தி) இருக்கிறது - 2 ملاحظة
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
38. ரமழானுக்கு ஒரு நாள் முந்தியோ இரண்டு நாட்களுக்கு முந்தியோ உங்களில் யாரும் நோன்பு நோற்க வேண்டாம்; (அந் நாட்களில் வழக்கமாக) நோன்பு நோற்கும் மனிதரைத் தவிர! அவர் அந்நாளில் நோன்பு நோற்கட்டும்!
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
39. (முஸ்லிம்களில் அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், சிறியவர், பெரியவர் ஆகிய அனைவருக்காகவும் ஒரு 'ஸாஉ' அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு 'ஸாஉ' அளவு தொலி நீக்கப்படாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்பே கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்)
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
40. அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசிக்கும் எந்தப் பெண்ணும் ஒரு பகல் ஓர் இரவு தொலைவுடைய பயணத்தை மஹ்ரமான (மணமுடிக்கத்தகாத) ஆண் துணையின்றி (தனியாக) மேற்கொள்ள வேண்டாம்
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
41. ஒருவர் மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால், அவர் தமது நோன்பை முழுமைப் படுத்தட்டும்; ஏனெனில், அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான்
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
42. நான் ஒரு பெருநாளில் உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் கலந்து கொண்டேன். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: இவ்விரு நாட்களிலும் நோன்பு நோற்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஒன்று, உங்கள் நோன்பிலிருந்து நீங்கள் விடுபடும் நோன்புப் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்) ஆகும்; மற்றொன்று, உங்கள் குர்பானி பிராணிகளின் இறைச்சியை நீங்கள் உண்ணும் (ஹஜ்ஜு) பெருநாள் ஆகும்
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
43. 'லப்பைக், அல்லாஹும்ம லப்பைக். லப்பைக், லா ஷரீக்க லக லப்பைக். இன்னல் ஹம்த வந்நிஃமத்த லக, வல்முல்க்க லா ஷரீக்க லக்'
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
44. ரமழானின் இறுதிப்பத்தில ஒற்றைப்படையான இரவுகளில்; 'லைலத்துல் கத்ர்' இரவைத் தேடிக்கொள்ளுங்கள்
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
45. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''இறுதி ஏழு(இரவு)களில் ஒன்று என்பதில் உங்கள் கனவுகள் எனது கனவுடன் ஒத்திருப்பதைக் காண்கிறேன். ஆகவே, அதைத் தேடுபவர் (ரமழானின்) இறுதி ஏழு (இரவு)களில் தேடிக் கொள்ளட்டும்!' என்று கூறினார்கள்
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
46. அல்லாஹ் ' உங்களுக்கும் தர்மம் செய்யக் கூடியவற்றை அருளவில்லையா?" ஒவ்வொரு 'தஸ்பீஹும்'; (ஸுப்ஹானல்லாஹ்) ஒரு தர்மமாகும் (ஸதகாவாகும் ). ஒவ்வொரு தக்பீரும்' (அல்லாஹு அக்பர்) ஒரு ஸதகாவாகும். ஒவ்வொரு தஹ்லீலும் (லாஇலாஹ இல்லல்லாஹ்) ஒரு ஸதகாவாகும்.ஒரு நன்மையை ஏவுவதும் ஸதகா. ஒரு தீமையை தடுப்பதும் ஸதகா. உங்கள் மனைவியரோடு உடலுறவுகொள்வதும் ஸதகா - 2 ملاحظة
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
47. ''யார் ஒரு முஃமினின் உலக துன்பமொன்றை நீக்கி விடுகிறாரோ, அல்லாஹ் அவருடைய மறுமை நாளின் துன்பமொன்றை நீக்குவான்
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
48. மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்விடம் தௌபா செய்து மீளுங்கள். நிச்சயமாக நான் ஒரு நாளைக்கு 100 தடவைகள் தௌபாச் செய்கிறேன் - 2 ملاحظة
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
49. 'நபி (ஸல்) அவர்கள், (துன்பத்தின்போது) அதிகமாகச் சப்தமிட்டு அழும் பெண்ணை விட்டும் மொட்டையடித்துக் கொள்ளும் பெண்ணை விட்டும் ஆடைகளைக் கிழித்துக் கொள்ளும் பெண்ணை விட்டும் தமது பொறுப்பை விலக்கிக் கொள்வதாக அறிவித்தார்கள். ' என்று கூறினார்கள்
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
50. ''இஸ்ரவேலர்களை நிர்வகிப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். இறைத்தூதர் ஒருவர் இறக்கும் போதெல்லாம் மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார். மேலும், எனக்குப்பின் எந்த இறைத்தூதரும் (வரப்போவது) இல்லை. ஆயினும், இனி (எனக்குப்பின்) கலீஃபாக்கள் (பிரதிநிதிகள்) நிறையப் பேர் தோன்றுவார்கள்'
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
51. ஆஇஷா (ரழி) அவர்கள் கூறியதாவது:
(ரமழானின் இறுதிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால், நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்தி(வழிபாடுக்கு ஆயத்தமாகி)விடுவார்கள்; இரவில் (இறைவனை வழிபட்டு) விழித்திருப்பார்கள்; (இறை வழிபாட்டிற்காக) தம் குடும்பத் தாரை எழுப்பிவிடுவார்கள்
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
52. பிரச்சினைகளின் போது வணக்கத்தில் ஈடுபடுவது என்னிடம் ஹிஜ்ரத் வந்ததைப் போலாகும்
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
53. ஒரு முஸ்லிம் பாவகாரியத்திற்காகவோ உறவுகளை துண்டிக்கும் வகையிலோ அன்றி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்ற போது அவனின் பிரார்த்தனை உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது அல்லது அப்பிரார்த்தனை மறுமையில் கூலி வழங்குவதற்காக சேமித்து வைக்கப்படுகிறது, அல்லது அவன் கேட்ட பிரார்த்தனைக்கு நிகரான தீங்கிலிருந்து அவனுக்கு பாதுகாப்புக் கிடைக்கிறது. இம்மூன்று விடயங்களில் ஏதாவது ஒன்றை நிச்சயமாக அவனின் பிரார்த்தனைக்கு அல்லாஹ் பிரதிபலனாக வழங்குகிறான் என்று கூறிய போது நபித்தோழர்கள் அவ்வாறாயின் நாம் அதிகம் பிரார்த்தனை செய்கிறோம் என்று கூற, அதற்கு நபி (ஸல்) அவர்கள் (ஆம் அதிகமாக இறைஞ்சுங்கள்) அல்லாஹ் மிக அதிகமாக வழங்குபவன் என்று கூறினார்கள்
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
54. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துன்பம் நேரும் போது, 'லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம். லா இலாஹ இல்லல் லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வ ரப்புல் அர்ழி வ ரப்புல் அர்ஷில் கரீம்' என்று ஓதுவார்கள்.
(பொருள்: கண்ணியமிக்கோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. மாபெரும் அரியணையின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் சிறப்பான அரியணையின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.)
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
55. (நபியே! உமக்கு) அல்லாஹ்வின் உதவியும், (அவன் அளிக்கும்) வெற்றியும் கிடைத்து...' எனும் (110ஆவது) அத்தியாயம் தமக்கு அருளப்பட்ட பின்னர் 'ஸுப்ஹானக்க ரப்பனா வபி ஹம்திக்க, அல்லாஹும்மஃக்பிர் லீ' (எங்கள் இறைவா! நீ தூயவன்; உன்னைப் போற்றுகின்றோம்; இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று தொழுகையில் கூறாமல் எந்தவொரு தொழுகையையும் நபி (ஸல்) அவர்கள் தொழுததில்லை
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
56. உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்பட்டால், அவர் தமது வாயின் மீது கையை வைத்து அதைத் தடுக்கட்டும். ஏனெனில், ஷைத்தான் (அப்போது வாய்க்குள்) நுழைகின்றான்
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
57. ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுக்கு செய்யவேண்டிய கடமைகள் ஆறு என நபியவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே அவை எவை எனக் கேட்கப்பட்டது ? அதற்கு நபியவர்கள் : ஒரு முஸ்லிமைச் சந்தித்தால் அவருக்கு ஸலாம் கூறுவீராக. அவர் உன்னை (விருந்துக்கு) அழைத்தால் அதற்கு பதிலளிப்பீராக. உன்னிடம் அறிவுரை கேட்டால் அவருக்கு அறிவுரை கூறுவீராக. அவர் தும்மி அல்ஹம்து லில்லாஹ் என்று கூறினால் அதற்கு யர்ஹமுகல்லாஹ் என்று கூறுவீராக. அவர் நோய்வாய்ப்பட்டால் அவரை சுகம் விசாரிக்கச் செல்வீராக. அவர் மரணித்துவிட்டால் அவரை அடக்கம் செய்வதற்காக பின்தொடர்ந்து செல்வாயாக என்று கூறினார்கள் - 4 ملاحظة
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
58. 'தனது ஆடையைத் (தரையில் படும் படி) தற்பெருமையுடன் இழுத்துக்கொண்டு சென்றவனை அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்.'
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
59. யார் (பொய்ச்) சத்தியம் செய்து ஒரு முஸ்லிமின் உரிமையை அபகரித்துக்கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தைக் கட்டாயமாக்கி விட்டான்; சொர்க்கத்தை அவருக்குத் தடை செய்துவிட்டான்' என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், 'அது ஒரு சிறிய பொருளாய் இருந்தாலுமா, அல்லாஹ்வின் தூதரே?' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர்; அவர்கள், 'மிஸ்வாக் மரத்தின் ஒரு குச்சியாக அது இருந்தாலும் சரியே!' என்று பதிலளித்தார்கள்
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
60. ஆரோக்கியமும் ஓய்வும் மக்களில் அதிகமானோர் அலட்சியமாக இருக்கும் இரு அருட்கொடைகளாகும்
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
61. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸுஜுதில் 'அல்லாஹும்மஃபிர்லீ தன்பீ குல்லாஹு திக்கஹு வஜில்லஹு வஅவ்வலஹு வஆகிரஹு வஅலானிய(த்)தஹு வஸிர்ரஹு' என்று கூறுவார்கள்.
இதன் பொருள் : யாஅல்லாஹ்! என் பாவத்தில் சிறியதையும், பெரியதையும், முதலாவதையும், கடைசியானதையும், பகிரங்கமானதையும், இரகசியமானதையும் மன்னிப்பாயாக - 8 ملاحظة
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
62. அடிக்கடி சாபம் இடுபவர்கள், கியாமத் நாளில் சாட்சிகளாகவும், பரிந்துரை செய்பவர்களாகவும் இருக்கமாட்டார்கள்.'
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
63. 'நிச்சயமாக அல்லாஹ் மிக வெட்கமுள்ளவன், தயாள குணம் படைத்தவன், தனது அடியான் தன்னிடம் பிரார்திப்பதற்காக உயர்த்திய கைகளை பதிலளிக்காது வெறுமையாக திருப்பி விடுவதை யிட்டும் வெட்கப்படுகிறான்'
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
64. ஒரு கூட்டதினர் சபையில் அமர்ந்து அதில் அல்லாஹ்வை அவர்கள் நினைவு கூறாமலும், தங்களுடைய நபியின் மீது ஸலவாத்து கூறாமலும் இருப்பார்களாயின் அதுவே அவர்களுக்கு (மறுமையில்) பேரிழப்பாக அமைந்துவிடும். அவன் நாடினால் அவர்களை அவன் தண்டித்து விடுவான் அவன் நாடினால் அவர்களை மன்னித்து விடுவான்
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
65. 'அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் சொற்சுருக்கமும் பொருட்செரிவும் மிக்க துஆக்களை விரும்பி ஓதுவார்கள்; அவை தவிர்ந்த பிற துஆக்களை விட்டு விடுவார்கள்.'
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
66. (பொய்) சத்தியம் செய்வது, பொருளை விலைபோகச் செய்யும்; இலாபத்தில் கிடைக்கும் பரக்கத்தை அழித்துவிடும்
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது
67. 'ரமழான் வந்துவிட்டால், சுவனத்தின் வாயில்கள் திறக்கப்பட்டுவிடும். நரகத்தின் வாயில்கள் மூடப் பட்டுவிடும். ஷைத்தான்கள் விலங்கிடப்பட்டு விடுவர்.'
عربي
ஆங்கில மொழிபெயர்ப்பு
உருது