عَنْ أَبِي حَازِمٍ قَالَ: قَاعَدْتُ أَبَا هُرَيْرَةَ رضي الله عنه خَمْسَ سِنِينَ، فَسَمِعْتُهُ يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:

«كَانَتْ بَنُو إِسْرَائِيلَ تَسُوسُهُمُ الأَنْبِيَاءُ، كُلَّمَا هَلَكَ نَبِيٌّ خَلَفَهُ نَبِيٌّ، وَإِنَّهُ لاَ نَبِيَّ بَعْدِي، وَسَيَكُونُ خُلَفَاءُ فَيَكْثُرُونَ» قَالُوا: فَمَا تَأْمُرُنَا؟ قَالَ: «فُوا بِبَيْعَةِ الأَوَّلِ فَالأَوَّلِ، أَعْطُوهُمْ حَقَّهُمْ، فَإِنَّ اللَّهَ سَائِلُهُمْ عَمَّا اسْتَرْعَاهُمْ».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

பனூ இஸ்ராஈல்கள் மீது நபிமார்கள் ஆட்சி செய்து வந்தனர்.ஒரு நபி இறந்து விட்ட போது இன்னொரு நபி அவருக்குப் பிரதிநிதியாகினார் ஆனால் நிச்சயமாக எனக்குப் பின்னர் இன்னொரு நபியில்லை.எனினும் எனக்குப் பின்னர் கலீபாக்கள் அதிகம் தோன்றுவர்.என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறிய போது,அப்படியாயின் எமக்குத் தாங்கள் இடும் கட்டளை யாது? என்று அவர்கள் கேட்டனர்.அதற்கு நபியவர்கள் முதன் முதலில் பைஅத் செய்து கொண்டவரின் பைஅத்தை நிறைவேற்றுங்கள். பின்னர் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய உரிமையைக் கொடுத்து விடுங்கள் மேலும் உங்களுக்குரியதை அல்லாஹ்விடம் கேளுங்கள்.ஏனெனில் தான் அவர்களிடம் ஒப்படைத்த பொருப்பினைப் பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடம் கேட்பான்.என்று ரஸூல் (ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

நிர்வாகிகளும்,அமீர்களும் குடிமக்களின் கருமங்களை நிர்வகிப்பது போன்று பனூ இஸ்ராஈல்களின் விவகாரங்களை நபிமார்கள் நிர்வகித்து வந்தனர்.மேலும் நபியொருவர் மரணத்தபோது அவருக்குப் பின்னர் இன்னொரு நபி வந்தார்.ஆனால் எனக்குப் பின்னால் இன்னொரு நபி வரமாட்டார்.எனினும் எனக்குப்பின்னால் அதிகமான கலீபாக்கள் தோன்றி அவர்கள் மனிதர்களை ஆட்சி புரிவார்கள்.என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறிய போது "உங்களுக்குப்பின்னர் கலீபாக்கள் அதிகரித்து விட்டால் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு விடுமே.அப்படியாயின் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று தாங்கள் நம்மைப்பணிக்கின்றீர்கள்"என ஸஹாபாக்கள் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வினவினர்.அதற்கு நபியவர்கள்,முதலில் பைஅத் செய்து கொண்டவரின் உரிமைகளை நீங்கள் நிறைவேற்றி வாருங்கள்.ஆனால் அவர்கள் உங்களின் உரிமைகளை நிறைவேற்றத் தவறினால் அது பற்றி அவர்களிடம் நிச்சயமாக அல்லாஹ் கேட்பான்.மேலும் அவர்கள் உங்களுக்குத் தர மறுத்த உங்களின் அந்த உரிமைகளுக்காக அல்லாஹ் உங்களுக்கு நற் கூலி வழங்குவான் என்று கூறினார்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம்
மொழிபெயர்ப்பைக் காண

பொருள் பதிவிறக்கம்