«إِنَّ رَبَّكُمْ حَيِيٌّ كَرِيمٌ، يَسْتَحْيِي مِنْ عَبْدِهِ إِذَا رَفَعَ يَدَيْهِ إِلَيْهِ أَنْ يَرُدَّهُمَا صِفْرًا».
[حسن] - [رواه أبو داود والترمذي وابن ماجه] - [سنن أبي داود: 1488]
المزيــد ...
நிச்சயமாக உங்களின் இரட்சகன் நாணமுடையவனும்,கொடை வள்ளலுமாவான் எனவே தன் அடியான் அவனின் இரண்டு கைகளையும் தன்னிடம் உயர்த்துகின்ற போது அதனை வெறுமையாக திருப்பிவிடுவதையிட்டு அவன் வெற்கப்படுகின்றான்.என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸல்மான் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை இப்னு மாஜா பதிவு செய்துள்ளார் - இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார் - இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார்]
பிரார்த்தனை செய்யும் போது இரண்டு கைகளையும் உயர்த்திக் கொள்வது அனுமதிக்கப்பட்ட செயல் என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாக விளங்குகின்றது.மேலும் இந்த அமைப்பில் துஆ கேட்பதானது கொடை வள்ளலான தன் பிரபுக்கு முன்னால் அடியான் தாழ்மையுடன் தன் தேவையை வௌிப்படுத்திக் காட்டுவதாகவும்,தன் வேள்டுகோலைத் தன் கையில் வைக்க வேண்டுமென்பதைப் பிரதிபளிக்கத் தக்கதாகவும் இருக்கின்றபடியால் துஆ ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு அது ஒரு காரணமாக அமைகின்றது ஏனெனில் அல்லாஹ் மகா கொடை வள்ளலாகவும்,அருளாளனாகவும் இருக்கின்றபடியால் அவனிடம் அவனின் அடியான் யாசித்துத் தன் கைகளை உயர்த்துகின்ற போது அவனை வெறுங்கையோடு திருப்பி அனுப்ப அல்லாஹ் வெற்கப்படுகின்றான்.என்பதே இதன் கருத்தாகும்.