«لَا يَمُوتَنَّ أَحَدُكُمْ إِلَّا وَهُوَ يُحْسِنُ بِاللهِ الظَّنَّ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2877]
المزيــد ...
"உங்களில் எவரும் அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொண்டவராகவே மரணிக்க வேண்டும்"என்று ரஸூல் (ஸல்) அவர்கள் தங்களின் மரணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் கூறியதைத் தான் செவிமடுத்ததாக,ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]
ஹதீஸ் விளக்கம்:ரஸூல் (ஸல்) அவர்கள் தங்களின் வபாத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் "உங்களில் எவரும் எந்த சந்தர்ப்பத்திலும் அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொண்டவராகவே மரணிக்க வேண்டும்" என்று கூறினார்கள் என ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.அதாவது அல்லாஹ் தன் மீது அருள் புரிவான்,தன் பாவங்களை மன்னிப்பான் என்று நல்லெண்ணம் கொண்ட நிலையில் மரணித்தல் வேண்டும் என்பதே இதன் கருத்தாகும்.