سَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْبِرِّ وَالْإِثْمِ، فَقَالَ: «الْبِرُّ حُسْنُ الْخُلُقِ، وَالْإِثْمُ مَا حَاكَ فِي صَدْرِكَ، وَكَرِهْتَ أَنْ يَطَّلِعَ عَلَيْهِ النَّاسُ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2553]
المزيــد ...
நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களிடம், நன்மையையும், பாவத்தையும் பற்றிக் கேட்டேன். அதற்கு நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்: 'நன்மை என்பது நற்குணமாகும். பாவம் என்பது உனது உள்ளத்தில் குறுகுறுப்பை ஏற்படுத்தும். மக்கள் அதைக் காண்பதை நீ வெறுப்பாய்.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 2553]
நன்மை மற்றும் பாவம் பற்றி நபியவர்களிடம் கேட்கப்பட்ட போது, நபியவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள் :
நன்மைகளில் மிக மகத்தானது, அல்லாஹ்வுடன் இறையச்சம் பேணி நற்குணமாக நடப்பதும், படைப்புக்களுடன் நோவினைகளைச் சகித்தும், கோபத்தைக் குறைத்தும், முகமலர்ச்சியை வெளிப்படுத்தியும், நல்வார்த்தைகள் பேசியும், உறவுகளை சேர்ந்து நடந்தும், கட்டுப்பட்டும், மென்மையைக் கடைப்பிடித்தும், நல்ல முறையில் தோழமை கொண்டு சேர்ந்து நடந்தும் நற்குணம் பேணுவதுமாகும் என்று பதிலளித்தார்கள்.
பாவம் என்பது, உள்ளத்தில் தடுமாற்றத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தும் ஒன்றாகும். உள்ளத்தில் அது பற்றிய சந்தேகம், அது பாவமாக இருக்கலாம் என்ற பயம் என்பவை இருக்கும். நல்ல மனிதர்களின் பார்வையில் அது அசிங்கமானதாக இருக்கும் என்பதால், அதை வெளிக்காட்டவும் விரும்பமாட்டீர்கள். ஏனெனில், மனித உள்ளம் இயல்பாகவே தனது நலவுகளை அடுத்தவர் பார்ப்பதை விரும்புகின்றது. எனவே அதன் ஒரு செயலை மனிதர்கள் பார்ப்பதை அது வெறுத்தால், அது ஒரு பாவம் என்றே அர்த்தமாகும்.