«لَا يَسْتُرُ عَبْدٌ عَبْدًا فِي الدُّنْيَا إِلَّا سَتَرَهُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2590]
المزيــد ...
உலகில் ஒரு அடியான் இன்னொரு அடியானின் தவறை மறைத்து விடுவானாகில் மறுமையில் அவனுடைய தவறை அல்லாஹ் மறைக்காமல் இருக்கமாட்டான் என்று ரஸூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்,என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]
ஹதீஸ் விளக்கம்:ஒருவனின் பாவ கருமத்தை அம்பலப்படுத்துவது என்பது ஆபாச காரியத்தை அம்பலப்படுத்துவதாகும்.எனவே தன் சகோதரன் பாவ காரியம் ஒன்றைச் செய்வதை ஒரு முஸ்லிம் கண்டால் அவன் அதனை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தாமல் மறைத்து வைப்பது அவனின் கடமை.ஆகையால் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி அவன் இப்படிச் செய்தால்,அதற்குக் கைமாறாக மறுமை நாளில் அவனின் தவறுகளை அல்லாஹ் மறைத்து விடுவான்,அதனை சாட்சிகள் மத்தியில் அம்பலப்படுத்தி அவனைக் கேவலப்படுத்த மாட்டான்.