«مَا جَلَسَ قَوْمٌ مَجْلِسًا لَمْ يَذْكُرُوا اللَّهَ فِيهِ وَلَمْ يُصَلُّوا عَلَى نَبِيِّهِمْ إِلاَّ كَانَ عَلَيْهِمْ تِرَةً، فَإِنْ شَاءَ عَذَّبَهُمْ وَإِنْ شَاءَ غَفَرَ لَهُمْ».
[صحيح] - [رواه أبو داود والترمذي والنسائي في الكبرى] - [سنن الترمذي: 3380]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக -அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் :
ஒரு கூட்டதினர் சபையில் அமர்ந்து அதில் அல்லாஹ்வை அவர்கள் நினைவு கூறாமலும், தங்களுடைய நபியின் மீது ஸலவாத்து கூறாமலும் இருப்பார்களாயின் அதுவே அவர்களுக்கு (மறுமையில்) பேரிழப்பாக அமைந்துவிடும். அவன் நாடினால் அவர்களை அவன் தண்டித்து விடுவான் அவன் நாடினால் அவர்களை மன்னித்து விடுவான்.
[சரியானது] - [இதனை அபூதாவுத், திர்மிதீ ஆகியோரும் குப்ராவில் நஸாஈ அவர்களும் பதிவு செய்துள்ளனர்] - [ஸுனன் திர்மிதீ - 3380]
நபி ﷺ அவர்கள், அல்லாஹ்வை நினைவு கூறுவதில்; அதாவது திக்ர் செய்வதில அலட்சியமாக இருப்பதைக் குறித்து எச்சரித்துள்ளார்கள். எந்தக் குழுவினர் ஒரு கூட்டத்தில் அமர்ந்து, அதில் அல்லாஹ்வை நினைவுகூராமலும், அவனுடைய தூதர் ﷺ மீது ஸலவாத்தும் சொல்லாமலும்; இருந்தார்களோ, அந்தக் மஜ்லிஸானது கியாமத் நாளில் அவர்களுக்கு பேரிழப்பாகவும், வருத்தம் நிறைந்தாகவும், கைசேதமாகவும் குறைபாடுடையதாகவும் மாறிவிடும். அல்லாஹ் நாடினால், அவர்களின் முந்தைய பாவங்களுக்காகவும் பின்னர் செய்த தவறுகளுக்காவும் அவர்களைத் தண்டிப்பான். அவன் நாடினால், தன் அருளாலும் கருணையாலும் அவர்களை மன்னிப்பான்.