1. முகப்பு
  2. பிரிவுகள்
  3. பிக்ஹும் அதன் அடிப்படைகளும்

ஹதீஸ் ' துல்ஹிஜ்ஜா பத்து நாட்களில் செய்யும் அமல்கள்தான் ஏனைய நாட்களில் செய்யும் அமல்களை விடவும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாக உள்ளது

عن ابن عباس رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم:
«ما مِنْ أيَّامٍ العمَلُ الصَّالِحُ فيها أحبُّ إلى اللهِ مِن هذه الأيام» يعني أيامَ العشر، قالوا: يا رسُولَ الله، ولا الجهادُ في سبيلِ الله؟ قال: «ولا الجهادُ في سبيلِ الله، إلا رجلٌ خَرَجَ بنفسِه ومالِه فلم يَرْجِعْ من ذلك بشيءٍ».

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள் :
' துல்ஹிஜ்ஜா பத்து நாட்களில் செய்யும் அமல்கள்தான் ஏனைய நாட்களில் செய்யும் அமல்களை விடவும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாக உள்ளது என்று நபி ஸல்லல்லாஹு அவர்கள் கூறியபோது, ஸஹாபாக்கள்: அல்லாஹ்வின் தூதரே 'ஜிஹாதை விடவுமா?' என்று கேட்டனர். அதற்கு 'தன் உயிரையும் பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர' எனப் பதிலளித்தார்கள்.

சரியானது இமாம்களான புஹாரி, அபூதாவூத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வறிவிப்பு அபூதாவூத் உடையதாகும் ஸுனன் அபூ தாவூத் - 2438

விளக்கம்

வருடத்தில் ஏனைய நாட்களை விடவும் துல்ஹிஜ்ஜா மாதத்தின் முதல் பத்து நாட்களில் செய்யும் நல்லமல்கள் மிகவும் சிறப்புக்குரியது என நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.
ஸஹாபாக்களிடம் அமல்களில் ஜிஹாதே மிகவும் சிறப்புக்குரிய அமல் -செயல் என்ற நிலைப்பாடு காணப்பட்டதினால் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் இந்த பத்து நாட்கள் அல்லாது வேறு நாட்களில் ஜிஹாத் செய்வது சிறப்புக்குரியதா அல்லது இந்த நாட்களில் நல்லமல்களில் ஈடுபடுவது சிறப்புக்குரியதா என வினவினார்கள்.அதற்கு நபியவர்கள்:
இந்த நாட்களில் நல்லமல்களில் ஈடுபடுவது ஜிஹாதை விடவும் மிகவும் சிறப்புக்குரியது என பதிலளித்தார்கள். ஆனால் ஒரு மனிதரைத் தவிர, அவர் தனது உயிரையும் உடமைகளையும அல்லாஹ்வின் பாதையில் பணயமாக வைத்து போராளியாக வெளிக்கிளம்பிச் சென்று, தனது செல்வத்தையும், உயிரையையும் இழக்கிறார் என்றால் அந்த மனிதரைத் தவிர என்றும் கூறினார்கள். இந்த சிறப்பான நாட்களில் சிறப்புற்று விளங்கும் அமல்களில் இதுதான் மேலானது.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. துல்ஹிஜ்ஜா பத்து நாட்களின் சிறப்பு குறிப்பிடபப்பட்டுள்ளமை, ஆகவே ஒரு முஸ்லிம் இந்த நாட்களை பயன்படுத்திக்கொள்வதுடன் வணக்கவழிபாடுளில் அதிகம் ஈடுபடுவதுடன் அல்லாஹ்வை அதிகம் திக்ர் செய்தல் அல்குர்ஆன் ஓதுதல், தக்பீர், தஹ்லீல், தஹ்மீத் போன்றவற்றை கூறுதல், தொழுதல், தர்மம் செய்தல், நோன்பு நோற்றல் போன்ற அனைத்துவகையான நற்காரியங்களிலிலும் ஈடுபடுதல் வேண்டும்.

மொழிபெயர்ப்பைக் காண

63 மொழி
EN English ஆங்கில மொழிபெயர்ப்பு
UR اردو உருது
ES Español ஸ்பானிய மொழி
ID Indonesia இந்தோனேஷியன்
UG ئۇيغۇرچە உய்குர் மொழி
BN বাংলা வங்காள மொழி
FR Français பிரஞ்சு
TR Türkçe துருக்கிய மொழி
RU Русский ரஷியன்
BS Bosanski போஸ்னியன்
SI සිංහල சிங்கள மொழி
HI हिन्दी ஹிந்தி மொழி
ZH 中文 சீன மொழி
FA فارسی பாரசீக மொழி
VI Tiếng Việt வியட்நாம் மொழி
TL Tagalog தகாலூக்
KU Kurdî குர்தி
HA Hausa ஹவுஸா
PT Português போர்த்துகீசியம்
ML മലയാളം மலயாளம்
TE తెలుగు தெலுங்கு
SW Kiswahili ஸ்வாஹிலி
MY မြန်မာ பர்மா
TH ไทย தாய்லாந்து
DE Deutsch ஜெர்மன்
JA 日本語 ஜப்பான்
PS پښتو بشتو
AS অসমীয়া Осомӣ
SQ Shqip Албанӣ
SV Svenska السويدية
AM አማርኛ الأمهرية
NL Nederlands الهولندية
GU ગુજરાતી الغوجاراتية
KY Кыргызча Қирғизӣ
NE नेपाली النيبالية
YO Yorùbá Юрба
LT Lietuvių الليتوانية
PRS دری الدرية
SR Српски الصربية
SO Soomaali الصومالية
TG тоҷикӣ الطاجيكية
RW Kinyarwanda Кинёрвондӣ
RO Română الرومانية
HU Magyar المجرية
CS Čeština التشيكية
MOS Moore الموري
MG Malagasy Малагашӣ
FF Fulfulde الفولانية
IT Italiano Итолёвӣ
OM Oromoo Урумӣ
KN ಕನ್ನಡ Канада
WO Wolof الولوف
BG Български البلغارية
AZ Azərbaycan Озарӣ
UZ O‘zbek الأوزبكية
UK Українська الأوكرانية
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
BM Bambara البامبارية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
KMR Kurmancî الكرمنجية