عَنِ الْبَرَاءِ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَا مِنْ مُسْلِمَيْنِ يَلْتَقِيَانِ فَيَتَصَافَحَانِ إِلَّا غُفِرَ لَهُمَا قَبْلَ أَنْ يَفْتَرِقَا».
[صحيح بمجموع طرقه] - [رواه أبو داود والترمذي وابن ماجه وأحمد] - [سنن أبي داود: 5212]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அல் பரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:
"இரண்டு முஸ்லிம்கள் சந்தித்து ஒருவருடன் ஒருவர் முஸாபஹா செய்யும் போது, அவர்கள் பிரியும் முன்னரே அவ்விருவரின் (சிறிய) பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன".
[ஒட்டுமொத்த வழிகள் ஊடாக சரியாகியது (ஸஹீஹ்)] - [இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்] - [ஸுனன் அபூ தாவூத் - 5212]
ஒரு பாதையில் அல்லது அதுபோன்ற இடத்தில் இரண்டு முஸ்லிம்கள் சந்தித்து, அவர்களில் ஒருவர் மற்றவருக்கு சலாம் கூறி, கைகுலுக்கினால்—அவர்கள் உடலால் பிரியும் முன்போ அல்லது கைகுலுக்கலை முடிக்கும் முன்போ—அவர்களிருவருக்கும் (அவர்களின் பாவங்கள்) மன்னிக்கப்படும் என நபி ﷺ அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள்.