பிரிவுகள்: . .
+ -
عن خَوْلَةَ بِنْتَ حَكِيمٍ السُّلَمِيَّةَ قَالتْ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«مَنْ نَزَلَ مَنْزِلًا ثُمَّ قَالَ: أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ، لَمْ يَضُرَّهُ شَيْءٌ حَتَّى يَرْتَحِلَ مِنْ مَنْزِلِهِ ذَلِكَ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2708]
المزيــد ...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதைதான் செவிமடுத்ததாக கவ்லா பின்த் ஹகீம் அஸ்ஸுலமிய்யா அவர்கள் அறிவிக்கிறார்கள்.
'யாரேனும் (பயணத்தில்) ஓரிடத்தில் தங்குவதற்காக இறங்கி பின்னர் 'அஊது பி கலிமாத்தில் லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்' (பொருள் : அல்லாஹ்வின் பூரணமான வார்த்தைகளைக் கொண்டு அவன் படைத்த அனைத்துப் படைப்புகளின் தீங்கை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன்) என்று கூறிப் பிரார்த்தித்தால், தங்கிய அந்த இடத்திலிருந்து அவர் புறப்பட்டுச் செல்லும் வரை எதுவும் அவருக்குத் தீங்கிழைக்காது'.

[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 2708]

விளக்கம்

பிரயாணம், சுற்றுலா போன்ற சந்தர்ப்பங்களில் ஓரிடத்தில் தங்க நேரிடும் போது மனிதனுக்கு இயல்பாக ஏற்படும் அச்சம், பாதுகாப்பற்ற உணர்வு போன்றவற்றிலிருந்து பாதுகாப்புத் தேடுமாறு நபியவர்கள் தனது சமூகத்திற்கு வழிகாட்டுகின்றார்கள். அதாவது சிறப்பிலும் பரகத்திலும் பயனளிப்பதிலும் அருள் பொதிந்த, அனைத்து குறைகளை விட்டும் தூய்மையான, நிறைவான அல்லாஹ்வின் வார்த்தை மூலம் தான் தங்கியிருக்கும் காலமெல்லாம் அவ்விடத்தில் தீங்கிழைக்கும் அனைத்தையும் விட்டு அபயத்தைத் தருமாறு பாதுகாப்புத் தேடுமாறு இதில் வழிகாட்டியுள்ளார்கள்.

الملاحظة
ترجمة
النص المقترح Хауля бинт Хаким (да будет доволен ею Аллах) передаёт, что Посланник Аллаха (мир ему и благословение Аллаха) говорил: «Тому, кто, остановившись где-нибудь, скажет: “Прибегаю к совершенным словам Аллаха от зла того, что Он сотворил (А‘узу би-калимати-Лляхи-т-таммати мин шарри ма халяк)”, — ничто не повредит до тех пор, пока он не покинет это место».

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. பாதுகாப்புத் தேடுவதும் ஒரு வணக்கமாகும். அது அல்லாஹ்வைக் கொண்டும் அவனின் பெயர்கள், மற்றும் பண்புகளைக் கொண்டமைந்ததாக இருத்தல் வேண்டும்.
  2. படைப்புகளிடத்தில் தனது இடர்களுக்கு பாதுகாவல் கோருவது ஷிர்க் -இணைவைப்பாகும், இதற்கு மாற்றமாக அல்லாஹ்வின் வார்த்தைகள் அவனின் பண்புகளின் ஒன்றாக இருப்பதால் அதனைக் கொண்டு பாதுகாவல் தேடுவது அனுமதிக்கப் பட்டிருத்தல்.
  3. இந்த துஆவின் சிறப்பும் இதனால் கிடைக்கும் பரகத்தும் தெளிவு படுத்தப்பட்டுள்ளமை.
  4. 'அஸ்கார்கள்' -நபியவர்கள் கற்றுத்தந்த திக்ர்கள் மூலம் பாதுகாப்புத் தேடுவதானது அடியான் தீங்குகளிலிருந்து பாதுகாப்புப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு வழிமுறையாகும்.
  5. அல்லாஹ் அல்லாத ஜின் சூனியக்காரர்கள், போலி ஆன்மீக வாதிகள் போன்றோரிடம் பாதுகாப்புத் தேடிச்செல்வது இஸ்லாமிய மார்க்கத்தில் சட்டபூர்வமற்றது என்பதை தெளிவுபடுத்தல்.
  6. ஊரில் அல்லது பிரயாணத்தில் ஓரிடத்தில் தங்கும் ஒருவர் இந்தப் பிரார்த்தனையை ஓதுவது மார்க்க வழிகாட்டலாகும்.
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية Юрба الليتوانية الدرية الصربية الصومالية الطاجيكية Кинёрвондӣ الرومانية المجرية التشيكية الموري Малагашӣ Итолёвӣ Урумӣ Канада الولوف البلغارية Озарӣ الأوكرانية الجورجية المقدونية
மொழிபெயர்ப்பைக் காண
பிரிவுகள்
  • .