«مَنْ خَرَجَ مِنَ الطَّاعَةِ، وَفَارَقَ الْجَمَاعَةَ فَمَاتَ، مَاتَ مِيتَةً جَاهِلِيَّةً، وَمَنْ قَاتَلَ تَحْتَ رَايَةٍ عِمِّيَّةٍ، يَغْضَبُ لِعَصَبَةٍ، أَوْ يَدْعُو إِلَى عَصَبَةٍ، أَوْ يَنْصُرُ عَصَبَةً، فَقُتِلَ، فَقِتْلَةٌ جَاهِلِيَّةٌ، وَمَنْ خَرَجَ عَلَى أُمَّتِي، يَضْرِبُ بَرَّهَا وَفَاجِرَهَا، وَلَا يَتَحَاشَى مِنْ مُؤْمِنِهَا، وَلَا يَفِي لِذِي عَهْدٍ عَهْدَهُ، فَلَيْسَ مِنِّي وَلَسْتُ مِنْهُ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 1848]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :
'(ஆட்சித் தலைமைக்குக்) கட்டுப்படாமல், (ஓர் ஆட்சித் தலைமையின் கீழ் ஒன்றுபட்ட) கட்டமைப்பிலிருந்து பிரிந்து, அதே நிலையில் ஒருவர் இறந்துவிட்டால், அறியாமைக் கால மரணத்தையே அவர் சந்திப்பார். ஒருவர் (கொள்கையோ இலக்கோ இல்லாத) மௌடீகத்தின் கொடிக்குக் கீழே நின்று போரிடுகிறார்; இன, கோத்திரத்திற்காகக் கோபப்படுகிறார். அல்லது இன, கோத்திரத்திற்கு அழைப்பு விடுக்கிறார். அல்லது இன, கோத்திரத்திற்கு உதவி செய்கிறார். இந்நிலையில் அவர் கொல்லப்பட்டுவிட்டால், அவரது மரணம் அறியாமைக் கால மரணமே ஆகும். யார் என் சமுதாயத்தாருக்கு எதிராக கிளர்ச்சி செய்து, அவர்களில் இறைநம்பிக்கையாளர்களைப் பொருட்படுத்தாமல் அவர்களில் நல்லவர்களையும் கெட்டவர்களையும் கொன்று, ஒப்பந்தம் செய்துள்ளவர்களின் ஒப்பந்தத்தை நிறைவேற்றத் தவறுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவருமில்லை. நான் அவரைச் சேர்ந்தவனுமில்லை'.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 1848]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் ஆட்சித்தலைமைகளுக்கு கட்டுப்படாது, சட்டரீதியாக –ஏகோபித்து-தெரிவுசெய்யப்பட்ட ஒரு இமாமுக்கு –ஆட்சியாளருக்கு கீழ் உள்ள முஸ்லிம் கூட்டமைப்பிலிருந்து விலகி, அதே நிலையில், அதாவது குறித்த ஆட்சியாளரை விட்டு விலகி கட்டுப்படாத நிலையில் மரணித்தால் அறியாமைக்காலத்தில் மரணித்த ஒருவரின் நிலையிலேயே அவன் மரணிக்கின்றான் என்று கூறியுள்ளார்கள்.
..... சத்தியம், அசத்தியம் பற்றிய எவ்வித தெளிவுமின்றி வெறுமனே தனது கோத்திரம் , அல்லது இனத்திற்காக கோபம் கொண்டு மார்க்கத்திற்கோ, சத்தியத்திற்கோ உதவும் நோக்கமின்றி எந்த அறிவோ தெளிவோ இன்றி தனது இன மற்றும் குலத்திற்காக போராடி அதே நிலையில் மரணித்தாலும் அவரும் அறியாமைக் காலத்தில் மரணித்தவர் போன்றாவார் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக ஒருவர் புரட்சி செய்து, நல்லவர்கள், தீயவர்களை தாக்கி தான் செய்வதை பொருட்படுத்தாது ஒரு முஃமினை கொல்வதால் அவனுக்கு கிடைக்கும் தண்டனையை அஞ்சாது, முஸ்லிம் பிரதேசங்களில் ஒப்பந்த அடிப்படையில் வாழும் மாற்று மதத்தவர், அல்லது ஒப்பந்தம் செய்து ஏற்றுக் கொண்ட அதிகாரிகளின் ஒப்பந்தங்களை நிறைவேற்றாது அதனை முறித்து அனைவரையும் தாக்குவது பெரும்பாவங்களில் ஒன்றாகும். இவ்வாறு செய்பவன் மேற்படி கடுமையான எச்சரிக்கைக்கு உட்படுவான்.