«قَالَ اللهُ: أَنْفِقْ يَا ابْنَ آدَمَ أُنْفِقْ عَلَيْكَ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 5352]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் :
'ஆதமின் மகனே! நீர் (எனது திருப்தியை அடைந்திட) செலவு செய்வீராக. உமக்காக நான் செலவு செய்வேன் . என்று அல்லாஹ் கூறினான்'.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 5352]
ஆதமின் மகனே நீ கட்டாயமான மற்றும் ஆகுமான விடயங்களில் செலவு செய்வீராக, நான் உனக்கு அதனை தாராளமாகவும் அதற்குப் பதிலாகவும் நிரப்பமாகத் தருவேன். மேலும் உனது செல்வத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்துவேன் என அல்லாஹ் கூறியதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு செய்தியை தெரிவிக்கிறார்கள்.