«إِنَّ اللهَ يُحِبُّ الْعَبْدَ التَّقِيَّ الْغَنِيَّ الْخَفِيَّ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2965]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் செவிமடுத்ததாக ஸஃத் இப்னு அபீ வக்காஸ் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் :
'இறை பக்தியுள்ள, தன்னிறைவுடன், ஒதுங்கி இருக்கும் அடியானை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கின்றான்'.
தனது அடியார்களில் சிலரை அல்லாஹ் விரும் புவதாக இந்த ஹதீஸில் நபியவர்கள் தெளிவு படுத்தியுள்ளார்கள். அவர்களுள் :
'அத்தகிய்யை (இறையச்சமுடையவரை) அல்லாஹ் விரும்புகிறான் அதாவது அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து அவன் தடைசெய்தவற்றைவிட்டு விலகி நடப்பவர்.
'அல்கனீ' என்ற சுயகௌரவத்துடன் தன்னிறைவோடு இருப்பவனை விரும்புகிறான். அதாவது தனது வறுமை நிலையை காட்டாது மனிதர்களிடம் எதனையும் எதிர்பார்க்காது, தன்னிறைவுள்ளவனாகவும், அல்லாஹ்வின் பக்கம் மாத்திரமே தேவையை எதிர்பார்த்திருப்பவன்.
' அல்கபி' யை விரும்புகிறான், அல்கபிஃ என்றால் பணிவுள்வன், தனது இரட்சகனுக்கு கட்டுப்பட்டு நடப்பவன், எவரும் அவரை அறிந்து கரிசனை காட்ட வேண்டும், அல்லது அவரை பாராட்டி புகழ வேண்டும் என்பதையெல்லாம் பொருட்படுத்தாது, பயனுள்ள விடயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
إثبات صفة المحبة لله –وهي على الوجه اللائق به-، وأنه يحب العبد الطائع.المراجع تحتاج تصحيح