عن أبي هريرة رضي الله عنه قال: «لَعَن رسول الله صلى الله عليه وسلم الرَّاشِي والمُرْتَشِي في الحُكْم».
[صحيح] - [رواه الترمذي وأحمد]
المزيــد ...

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் : நபி (ஸல்) அவர்கள்.(தீர்ப்பில்) இலஞ்சம் கொடுப்பவனையும், எடுப்பவனையும் சபித்தார்கள்.
ஸஹீஹானது-சரியானது - இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்

விளக்கம்

தவறான முறையில் ஒன்றை அடைந்து கொள்ள பணத்தை செலவு செய்வதுதான் இலஞ்சத்தின் யதார்த்தம் என்பதாலும், அதனால் தனிநபர், சமூகம் அனைத்திற்கும் பாரிய விளைவுகள் உள்ளன என்பதாலும் அதனைக் கொடுப்பவர், எடுப்பவர் இருவரும் அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாக்கப்பட வேண்டுமென நபியவர்கள் சபித்துள்ளார்கள். பொதுவாகவே இலஞ்சம் ஹராமாகும். இருப்பினும் மார்க்க சட்டத்தை மாற்றியமைக்கும் அமைப்பில் தீர்ப்பு வழங்குவதற்காக இலஞ்சம் கொடுப்பதால் அது பாரதூரமானது என்பதாலே இங்கு குறித்துச் சொல்லப்பட்டுள்ளது. இலஞ்சம் கொடுப்பவனின் நலனுக்காகத் தீர்ப்பை மாற்றியமைத்தல், தண்டனையைக் குறைத்தல் போன்ற நோக்கங்களுக்காக நீதிபதிக்கு இலஞ்சம் கொடுப்பதை உதாரணமாகக் கூறலாம்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. இலஞ்சத்தில் தவறுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நிலை உள்ளதால் அதனைக் கொடுத்தல், எடுத்தல், அதற்காக மத்திமம் வகித்தல், துணைபோதல் அனைத்தும் ஹராமாகும்.
  2. இலஞ்சம் பெரும்பாவங்களில் ஒன்றாகும். ஏனெனில் நபியவர்கள் அதனை எடுப்பவர், கொடுப்பவர் இருவரையும் சபித்துள்ளார்கள்.-பெரும்பாவங்களில் ஒன்றுக்கே சாபமிடப்படும்- இது ஹராம் என்பதில் அனைத்து அறிஞர்களும் ஒருமித்துள்ளனர்.
  3. மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் புசித்தல், அல்லாஹ்வின் சட்டத்தை மாற்றுதல், அவன் இறக்காததை வைத்துத் தீர்ப்பு வழங்கல் போன்றன நீதித்துறையில் இலஞ்சப் பரிவர்த்தணையின் போது ஏற்படுவதால் அது பாரிய குற்றமாகவும், கடுமையான பாவமாகவும் உள்ளது. அதனை எடுத்தவர் அதன் மூலம் தனக்கே அநீதி இழைத்துக் கொண்டதுடன் குற்றவாளி, நிரபராதி இருவருக்கும் அநீதியிழைத்தவராக மாறிவிடுகின்றார்.
மேலதிக விபரங்களுக்கு