«السِّوَاكُ مَطْهَرَةٌ لِلْفَمِ، مَرْضَاةٌ لِلرَّبِّ».
[صحيح] - [رواه النسائي وأحمد] - [مسند أحمد: 24203]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா கூறுகின்றார்கள் :
'பல் துலக்குவது வாயை சுத்தப்படுத்தும், இறை திருப்தியைப் பெற்றுத் தரும்'.
[ஸஹீஹானது-சரியானது] - - [مسند أحمد - 24203]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பற்களை அராக் மரக் குச்சியினால் அல்லது அது போன்றவைகளினால் சுத்தம்செய்வது வாயிலுள்ள அழுக்குகள், துர் வாடை ஆகியவற்றை நீக்கி வாயை சுத்தப்படுத்தும் என இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். பல்துலக்குவதில் அல்லாஹ் விரும்பும் சுத்தமும், அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு, அவனின் ஏவலுக்கு கீழ்படிவதும் இருப்பதால், அடியான் இறை திருப்தியை பெறுவதற்கான வழிகளில் ஒன்றாகவும் இது காணப்படுகிறது.
أن السواك وسيلة لتطهير الفَم.مافي