+ -

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لَمَّا خَلَقَ اللَّهُ الْجَنَّةَ وَالنَّارَ أَرْسَلَ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ إِلَى الْجَنَّةِ، فَقَالَ: انْظُرْ إِلَيْهَا وَإِلَى مَا أَعْدَدْتُ لِأَهْلِهَا فِيهَا. فَنَظَرَ إِلَيْهَا فَرَجَعَ، فَقَالَ: وَعِزَّتِكَ لَا يَسْمَعُ بِهَا أَحَدٌ إِلَّا دَخَلَهَا. فَأَمَرَ بِهَا فَحُفَّتْ بِالْمَكَارِهِ، فَقَالَ: اذْهَبْ إِلَيْهَا فَانْظُرْ إِلَيْهَا وَإِلَى مَا أَعْدَدْتُ لِأَهْلِهَا فِيهَا. فَنَظَرَ إِلَيْهَا، فَإِذَا هِيَ قَدْ حُفَّتْ بِالْمَكَارِهِ، فَقَالَ: وَعِزَّتِكَ لَقَدْ خَشِيتُ أَنْ لَا يَدْخُلَهَا أَحَدٌ. قَالَ: اذْهَبْ فَانْظُرْ إِلَى النَّارِ وَإِلَى مَا أَعْدَدْتُ لِأَهْلِهَا فِيهَا. فَنَظَرَ إِلَيْهَا فَإِذَا هِيَ يَرْكَبُ بَعْضُهَا بَعْضًا، فَرَجَعَ فَقَالَ: وَعِزَّتِكَ لَا يَدْخُلُهَا أَحَدٌ. فَأَمَرَ بِهَا فَحُفَّتْ بِالشَّهَوَاتِ، فَقَالَ: ارْجِعْ فَانْظُرْ إِلَيْهَا. فَنَظَرَ إِلَيْهَا فَإِذَا هِيَ قَدْ حُفَّتْ بِالشَّهَوَاتِ، فَرَجَعَ وَقَالَ: وَعِزَّتِكَ لَقَدْ خَشِيتُ أَنْ لَا يَنْجُوَ مِنْهَا أَحَدٌ إِلَّا دَخَلَهَا».

[حسن] - [رواه أبو داود والترمذي والنسائي] - [سنن أبي داود: 4744]
المزيــد ...

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
'அல்லாஹ் சுவர்க்கத்தையும் நரகத்தையும் படைத்து விட்டு, ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை சுவர்க்கத்துக்கு அனுப்பி சுவர்க்கத்தையும், சுவர்க்கவாசிகளுக்காக நான் தயார்செய்தவற்றையும் பார்ப்பீராக என்று கூறினான். அவர் அதனை பார்த்துவிட்டு வந்து உனது கண்ணியத்தின் மீது சத்தியமாக எவரும் அதன் இன்பம் பற்றி கேள்விப்பட்டால்; அதில் நுழைந்து விடவே நினைப்பர். உடனே அந்த சுவர்க்கம் வெறுக்கப்டபடக்கூடிய விடயங்களால் சூழ்ந்திருக்க கட்டளைப் பிரப்பித்தான். மீண்டும் அங்கு சென்று சுவர்க்கவாசிகளுக்கு தான் தயார்செய்தவற்றை பார்த்து வருமாறு கூறினான் அங்கு சென்று பார்த்த போது சுவர்க்கம் வெறுக்கத்தக்க விடயங்களால் சூழப்பட்டிருந்தது. அதற்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உனது கண்ணியத்தின் மீது சத்தியமாக அதனுள் எவரும் நுழைய மாட்டார்களோ என நான் பயப்படுகிறேன். பின் நரகத்தையும் நரகவாதிகளுக்கு தான் தயார்ப்படுத்திவைத்திருப்பவற்றை பார்ப்பீராக என ஜிப்ரீலிடம் அல்லாஹ் கூற, அதனைச் சென்று பார்த்த போது அது அடுக்கடுக்காக இருப்பதை கண்டார்.பின் திருப்பிவந்து உனது கண்ணியத்தின் மீது ஆணையாக அதில் எவரும் நுழைய விரும்ப மாட்டார்கள். உடனே அல்லாஹ் நரகத்தை இச்சைகளால் சூழ்ந்திருக்க கட்டளைப்பிரப்பித்தான் பின் மீண்டும் அதனை பார்த்து வருமாறு அவருக்கு கட்டளையிட்டான் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸ்லாம் அவர்கள் சென்று பார்த்த போது அது இச்சைகளால் சூழப்பட்டிருந்தது.உடனே திரும்பி வந்து (இறைவா) உனது கண்ணியத்தி;ன் மீது சத்தியமாக அதனுள் நுழையாது எவறும் தப்ப மாட்டார்கள் என நான் அஞ்சுகிறேன் என்று கூறினார்.'

[ஹஸனானது-சிறந்தது] - - [سنن أبي داود - 4744]

விளக்கம்

அல்லாஹ் சுவர்க்கத்தையும், நரகத்தையும் படைத்த போது, ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சுவர்க்கத்தை சென்று பார்ப்பீராக என்று கூற அவர் அதனை பார்த்து விட்டு அல்லாஹ்விடம் திரும்பி வந்தார் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். சுவர்க்கத்தை பார்த்துவிட்டு திரும்பிய ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வை விளித்து எனது இரட்சகனே! உனது மாட்சிமையின் -கண்ணியத்தின் மீது சத்தியமாக இந்த சுவர்க்கத்தில் உள்ள இன்பங்கள் சுகங்கள் பாக்கியங்கள் பற்றி எவரும் கேள்விப்படுவாராயின் அதில் நுழைவதற்கு அதிவிருப்பம் உடையவராகவே இருப்பார். அதனை அடைந்து கொள்ள நல்ல காரியங்களில் ஈடுபடுவார் என்று கூறினார். பின்னர், அல்லாஹ் இன்னல்களாலும், (இடையூறுகளாலும்), இறைகட்டளைகளை எடுத்து நடக்கும் போதும், அவன் தடுத்தவற்றை தவிர்ந்து விலகி நடக்கும் போதும் ஏற்படுகின்ற சிரமங்களாலும் அதனை சூழச்செய்தான். ஆகவே யார் அதில் -சுவர்க்கத்தினுள் நுழைய விரும்புகிறாரோ அவர் இந்த இடையூறுகளை தாண்டிச்செல்லல் அவசியமாகும். சுவர்க்கம் இன்னல்களால் சூழப்பபட்டதன் பின், ஜிப்ரீலே இப்போது சுவர்க்கத்தை பார்த்து வருவீராக என்று அல்லாஹ் கூறினான். உடனே அவர் அதனைப் பார்த்து விட்டு வந்து ; எனது இரட்சகனே உனது கண்ணியத்தின் மீது சத்தியமாக , சுவர்க்கம் செல்லும் பாதையில் எதிர்ப்படும் சிரமங்கள் மற்றும் இன்னல்களினால் எவறும் அதில் நுழைய மாட்டார்கள் என நான் அஞ்சுகிறேன் எனக் கூறினார். நரகத்தை அல்லாஹ் படைத்த வேளை ஜிப்ரீலே அதனைப்பார்;த்து வருவீராக எனக் கூற உடனே ஜிப்ரீல் அதனை பார்க்கச் சென்றார். பின் மீண்டும் அல்லாஹ்விடம் அவர் வந்து எனது இரட்சனே! உனது கண்ணியத்தின் மீது சத்தியமாக, அதன் வேதனை,கடுந்துயர்,இன்னல்கள் மற்றும் சித்திர வதைகள் போன்றவற்றை கேள்விப்படும் எவரும் அதில் நுழைவதை விரும்பாது அதன் பால் இட்டுச்செல்லும் வழிகளிலிருந்து விலகி நடப்பர் என்று கூறினார். அல்லாஹ் மனோ இச்சைகள், உலக இன்பங்கள் போன்றவைகளால் அந்நரகத்தை சூழச்செயததன் பின், ஜிப்ரீலே இப்போது நரகத்தை பார்த்து வருவீராக என்று கூறினான். உடனே ஜிப்ரீல் அதனைப்பார்த்துவிட்டு அல்லாஹ்விடம் வந்து இறைவா! உனது கண்ணியத்தின் மீது சத்தியமாக அந்த நரகத்தை சூழ மனோஇச்சைகளும், உலகியல் இன்பங்களும் இருப்பதால் அதில் நுழையாது எவரும் தப்பிட மாட்டார்கள் என நான் அஞ்சுகிறேன் என்று கூறினார்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية Юрба الليتوانية الدرية الصربية الصومالية الطاجيكية Кинёрвондӣ الرومانية المجرية التشيكية الموري Малагашӣ Итолёвӣ Урумӣ Канада الولوف البلغارية Озарӣ اليونانية الأوزبكية الأوكرانية الجورجية اللينجالا المقدونية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. சுவர்க்கமும், நரகமும் தற்போதும் உள்ளது என ஈமான் கொள்ளுதல்.
  2. மறைவானவற்றையும்,அல்லாஹ்விடமிருந்தும் ; அவனின் தூதரிடமிருந்தும் வழிகாட்டல்கள் என வந்தவற்றையும் ஈமான் கொள்வது கடமை.
  3. சுவர்கத்தின் பால் இட்டுச்செல்லும் காரணியாக இன்னல்கள் இருப்பதால் அதில் பொறுமையை கடைபிடிப்பதன் அவசியம் குறித்து இந்த ஹதீஸ் குறிப்பிடுகிறது.
  4. நரகத்திற்கு வழிவகுக்கும் காரணியாக தடைசெய்யப்பட்டவை இருப்பதால் அவற்றிலிருந்து விலகி நடப்பதன் அவசியம். குறித்து இந்த ஹதீஸ் குறிப்பிடுகிறது.
  5. சுவர்க்கம் இன்னல்களாலும் நரகம் இச்சைகளாலும் சூழப்பட்டதாக இருப்பது, உலக வாழ்வின் சோதனைக்கான அடிப்படையாகும்.
  6. சுவர்க்கத்திற்கான பாதை கடினமும் சிரமும் நிறைந்தது, அதற்கென நம்பிக்கையுடன்(ஈமானுடம்) பொறுமை மற்றும் இன்னல்களை அனுபவித்தல் என்பனவும் அவசியம். மேலும், நரகத்திற்கான பாதை இந்த உலகின் இன்பங்களாலும் ஆசைகளாலும் நிறைந்தது.
மேலதிக விபரங்களுக்கு