+ -

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:
«‌إِنَّ ‌أَثْقَلَ صَلَاةٍ عَلَى الْمُنَافِقِينَ صَلَاةُ الْعِشَاءِ وَصَلَاةُ الْفَجْرِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِيهِمَا لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا، وَلَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ بِالصَّلَاةِ فَتُقَامَ، ثُمَّ آمُرَ رَجُلًا فَيُصَلِّيَ بِالنَّاسِ، ثُمَّ أَنْطَلِقَ مَعِي بِرِجَالٍ مَعَهُمْ حُزَمٌ مِنْ حَطَبٍ إِلَى قَوْمٍ لَا يَشْهَدُونَ الصَّلَاةَ، فَأُحَرِّقَ عَلَيْهِمْ بُيُوتَهُمْ بِالنَّارِ».

[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 651]
المزيــد ...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
'நயவஞ்சகர்களுக்கு மிகவும் சிரமமான தொழுகை, இஷாவும் ஃபஜ்ரும் (ஸுப்ஹ்) ஆகும். அவர்கள் அவ்விரு தொழுகைகளில் உள்ள சிறப்பை அறி வார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள். நான் தொழுகைக்கு (பாங்கும்) இகாமத்(தும்) சொல்லுமாறு கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை மக்களுக்குத் தலைமையேற்றுத் தொழுவிக்குமாறு பணித்துவிட்டுப் பிறகு என்னுடன் விறகுக் கட்டைகள் சுமந்த சிலரை அழைத்துக்கொண்டு, கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ளாத மக்களை நோக்கிச் சென்று, அவர்களை வீட்டோடு சேர்த்து எரித்துவிட வேண்டும் என மனம் நாடுகிறது' எனக் கூறினார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح مسلم - 651]

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நயவஞ்சகர்கள் பற்றியும் அவர்கள் ஜமாத் தொழுகைக்கு கலந்து கொள்ளாது சோம்பரித்தனமாக இருப்பதை குறித்தும் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். குறிப்பாக அவர்கள் இஷா மற்றும் பஜ்ர் தொழுகைக்கு சமூகளிப்பதில்லை. அவர்கள் அவ்விரு தொழுகைககளிலும் சக முஸ்லிம்களுடன் ஜமாஅத்தில் கலந்து கொள்வதால் கிடைக்கும் நன்மை, மற்றும் வெகுமதியின் அளவை அறிவார்களேயானால் அவர்கள் குழந்தைகள் கை, கால்களால் தத்தித் தவழ்வதைப் போன்று தவழ்ந்தாயினும் வந்து சேர்வார்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.
التالي هو 2 جمل مترابطة : ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்வதன் முக்கியத்துவத்தின் காரணமாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒருவரை தொழுகைக்காக இகாமத் கூறுமாறு பணித்து, அவர்களுக்கு பதிலாக இன்னொரு நபரை மக்களுக்கு இமாமத் செய்யுமாறு பணித்து விட்டு தம்முடன் விரகுகளை சுமந்த சில மனிதர்களை அழைத்துச் சென்று ஜமாஅத் தொழுகைக்கு சமூகம் அளிக்காதோரின் வீடுகளை எறிப்பதற்கு எத்தனித்தார்கள். காரணம் நியாயமான காரணமின்றி ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ளாதிருப்பது மிகப்பெரும் பாவம் என்பதினாலாகும். இவ்வாறிருந்தும் நபியவர்கள் வீடுகளில் பெண்கள் மற்றும் ஏதும் அறியாத குழந்தைகள் போன்ற சலுகை பெற்றோர் இருந்ததினால் அவர்கள் எரிக்கும் எண்ணத்தை கைவிட்டார்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية Юрба الليتوانية الدرية الصربية الصومالية Кинёрвондӣ الرومانية التشيكية Малагашӣ Итолёвӣ Урумӣ Канада Озарӣ الأوكرانية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. பள்ளிவாயிலில் ஜமாஅத் தொழுகையில் கலந்துகொள்ளாதிருப்பதன் விபரீதம் இந்த ஹதீஸில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை.
  2. நயவஞ்சகர்கள் முகஸ்துதி மற்றும் பிறர் தம்மைப்பற்றி பெருமையாக பேசிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே வணக்கவழிபாடுளில் ஈடுபடுபடுகின்றனர். ஆகையால் மக்கள் அவர்களை காணும் வேளையில் மாத்திரம் தொழுக்காக சமூகமளிப்பர்.
  3. இஷா, பஜ்ர் தொழுகைகளைக் கூட்டாக நிறைவேற்றுதனால் பாரிய கூலி கிடைப்பதுடன், தவழ்ந்தாவது சமூகந்தர மிக அருகதையானதே அவ்விரு தொழுகைகளும்.
  4. இஷா மற்றும் பஜ்ர் தொழுகைகளை பேணி வருவது நயவஞ்சகத்தை விட்டும் பாதுகாப்பாகும். அவ்விரண்டிலும் பின்வாங்குவது நயவஞ்சகத்தின் அடையாளமாகும்.
மேலதிக விபரங்களுக்கு