«أَحَقُّ الشُّرُوطِ أَنْ تُوفُوا بِهِ مَا اسْتَحْلَلْتُمْ بِهِ الْفُرُوجَ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 2721]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உக்பா இப்னு ஆமிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
'நீங்கள் நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளில் மிகப் பொருத்தமானது உங்கள் மனைவியரின் கற்பை ஹலாலாக அடைந்து கொள்ளச் செய்து கொண்ட ஒப்பந்தமாகும்'.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 2721]
நிறைவேற்றப்படுவதற்கு மிகவும் தகுதியானதும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டியதுமான நிபந்தனைகளுள் ஒரு பெண்ணை மனைவியாக அனுபவிப்பதை அனுமதிக்க காரணமாக அமைந்துள்ள நிபந்தனையே என நபியவர்கள் இந்த ஹதீஸில் தெளிவு படுத்துகிறார்கள். இங்கு நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிபந்தனையாவது ஒரு பெண் திருமண ஓப்பந்தத்தின் போது கோரும் அனுமதிக்கப்பட்ட நிபந்தனைகளையே குறிக்கும்.