1. முகப்பு
  2. பிரிவுகள்
  3. பிக்ஹும் அதன் அடிப்படைகளும்

ஹதீஸ் ' (பிரதிவாதியை விசாரிக்காமல் ) மக்களின் வாதத்திறமையின் அடிப்படையில் அவர்கள் கோருவதெல்லாம் வழங்கப்பட்டால், மக்களில் பலர்; ஏனைய மனிதர்களின் உயிர்க்ளுக்கும் உடமைகளுக்கு உரிமை கோரத் தொடங்குவார்கள். எனவே உரிமை கொண்டாடும் வாதி அதற்கான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும், அதனை மறுப்பவர் -பிரதிவாதி- சத்தியம் செய்ய வேண்டும்.'

عَن ابنِ عباسٍ رضي الله عنهما أنَّ رسولَ اللهِ صلي الله عليه وسلم قال:
«لَو يُعطَى النّاسُ بدَعواهُم لادَّعَى رِجالٌ أموالَ قَومٍ ودِماءَهُم، ولَكِنَّ البَيِّنَةَ على المُدَّعِى، واليَمينَ على مَن أنكَرَ».

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் :
' (பிரதிவாதியை விசாரிக்காமல் ) மக்களின் வாதத்திறமையின் அடிப்படையில் அவர்கள் கோருவதெல்லாம் வழங்கப்பட்டால், மக்களில் பலர்; ஏனைய மனிதர்களின் உயிர்க்ளுக்கும் உடமைகளுக்கு உரிமை கோரத் தொடங்குவார்கள். எனவே உரிமை கொண்டாடும் வாதி அதற்கான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும், அதனை மறுப்பவர் -பிரதிவாதி- சத்தியம் செய்ய வேண்டும்.'

சரியானது இதனை அல்பைஹகீ பதிவு செய்துள்ளார் இமாம் பைஹகியின் ஸுனனுல் குப்ரா - 21243

விளக்கம்

எவ்வித ஆதாரமோ, தகுந்த சாட்சியங்களோ இல்லாது தங்களது வாதத்தின் அடிப்படையில் வழக்காடும் ஒருவருக்கு அவரால் கோரப்படுபவை வழங்கப்படும் என்றிருந்தால் சிலர் மக்களின் உடமைகளையும், அவர்களின் உயிரையும் கூட உரிமை கோரத் தொடங்குவார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். ஆகவே, வாதி தனது கூற்றுக்கான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும். அவரிடம் ஆதாரம் இல்லையென்றால், அந்தக் கோரிக்கை பிரதிவாதியின் முன் வைக்கப்படும். அவர் மறுத்தால், அவர் சத்தியம் செய்ய வேண்டியிருக்கும். அதன் பிறகு அவர் குற்றமற்றவர் என்று அறிவிக்கப்படுவார்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. இப்னு தகீக் அல்-ஈத் கூறுகிறார் : சர்ச்சை மற்றும் மோதலின் போது பின்பற்ற வேண்டிய மிகப்பெறும் அடிப்படையொன்றையும் சட்டத் தீர்புகளின் அடிப்படை பற்றி பேசக்கூடியதுமான ஒரு பிரதான ஹதீஸாகும்.
  2. மோசடி செய்தல் மற்றும் சூழ்சி செய்தல் ஆகியவற்றிலிருந்து மக்களின் உயிர்களையும் உடமைகளையும் பாதுகாக்கவே இஸ்லாமிய ஷரீஆ வந்துள்ளது.
  3. நீதிபதி தனது அறிவின் படி தீர்ப்பளிக்காமல் ஆதாரங்களை அவதானிப்பதன் மூலமே தீர்ப்பளிக்க வேண்டும்
  4. உரிமைகள் மற்றும் வியாபார பரிவர்த்தனைகள் தொடர்பானதாக இருந்தாலும் சரி அல்லது ஈமான் மற்றும் அறிவு தொடர்பானதாக இருந்தாலும் சரி ஆதாரம் இல்லாமல் யாராவது உரிமை கோரினால் அது நிராகரிக்கப்படும்

மொழிபெயர்ப்பைக் காண

61 மொழி
EN English ஆங்கில மொழிபெயர்ப்பு
UR اردو உருது
ES Español ஸ்பானிய மொழி
ID Indonesia இந்தோனேஷியன்
UG ئۇيغۇرچە உய்குர் மொழி
BN বাংলা வங்காள மொழி
FR Français பிரஞ்சு
TR Türkçe துருக்கிய மொழி
RU Русский ரஷியன்
BS Bosanski போஸ்னியன்
SI සිංහල சிங்கள மொழி
HI हिन्दी ஹிந்தி மொழி
ZH 中文 சீன மொழி
FA فارسی பாரசீக மொழி
VI Tiếng Việt வியட்நாம் மொழி
TL Tagalog தகாலூக்
KU Kurdî குர்தி
HA Hausa ஹவுஸா
PT Português போர்த்துகீசியம்
ML മലയാളം மலயாளம்
TE తెలుగు தெலுங்கு
SW Kiswahili ஸ்வாஹிலி
MY မြန်မာ பர்மா
TH ไทย தாய்லாந்து
DE Deutsch ஜெர்மன்
JA 日本語 ஜப்பான்
PS پښتو بشتو
AS অসমীয়া Осомӣ
SQ Shqip Албанӣ
SV Svenska السويدية
AM አማርኛ الأمهرية
NL Nederlands الهولندية
GU ગુજરાતી الغوجاراتية
KY Кыргызча Қирғизӣ
NE नेपाली النيبالية
LT Lietuvių الليتوانية
PRS دری الدرية
SR Српски الصربية
TG тоҷикӣ الطاجيكية
RW Kinyarwanda Кинёрвондӣ
RO Română الرومانية
HU Magyar المجرية
CS Čeština التشيكية
MOS Moore الموري
MG Malagasy Малагашӣ
OM Oromoo Урумӣ
KN ಕನ್ನಡ Канада
WO Wolof الولوف
AZ Azərbaycan Озарӣ
UZ O‘zbek الأوزبكية
UK Українська الأوكرانية
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
BM Bambara البامبارية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية
DA Dansk الدنماركية
RN Kirundi الكيروندي
KMR Kurmancî الكرمنجية
MS Bahasa Melayu الملايو