«بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً، وَحَدِّثُوا عَنْ بَنِي إِسْرَائِيلَ وَلَا حَرَجَ، وَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ».
[صحيح] - [رواه البخاري] - [صحيح البخاري: 3461]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹுமா கூறுகின்றார்கள் :
'என்னைப் பற்றி ஒரு வார்த்தையேனும் எத்தி வையுங்கள். பனூ இஸ்ராயீல்கள் (இஸ்ரவேல் சந்ததியினர்) பற்றி கூறுங்கள் குற்றமில்லை. என் மீது வேண்டுமென்றே யாரேனும் பொய்யுரைத்தால் அவர் நரகத்தை தனக்குரிய தங்குமிடமாக எடுத்துக் கொள்ளட்டும்'.
அல்குர்ஆன் அஸ்ஸுன்னா ஆகியவற்றிலிருந்து தன்னிடம் பெற்றுக் கொண்ட அறிவை மனிதர்களுக்கு எத்திவைக்குமாறு நபியவர்கள் கட்டளை பிரப்பிக்கிறார்கள். பிறருக்கு எத்திவைப்பவரும், அழைப்பவரும் குறித்த விடயத்தை நன்கு தெரிந்தவராகவும், விளங்கியவராகவும் இருக்க வேண்டுமென்ற நிபந்தனையோடு, அறிவிக்கும் விடயம் அல்குர்ஆன் அல்லது ஹதீஸின் ஒரு வசனம் போன்று சிறியதாக இருந்தாலும் சரியே. இஸ்ரவேலர்களுக்கு நிகழ்ந்தவற்றை, அவை எமது ஷரீஅத்துடன் முரண்படாத வகையில் இருப்பின் அவற்றை அறிவிப்பதில் எவ்விதக் குற்றமுமில்லை என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். பின்னர் அவர்களின் மீது பொய்யுரைப்பதை எச்சரித்துள்ளதோடு, அவ்வாறு வேண்டுமென்று மனமுரண்டாக பொய்யுரைப்பவர் நரகத்தில் தனக்கென ஒரு தங்குமிடத்தை எடுத்துக் கொள்ளட்டும் என்றும் குறிப்பிட்டார்கள்.