عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«بَادِرُوا بِالْأَعْمَالِ فِتَنًا كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ، يُصْبِحُ الرَّجُلُ مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا، أَوْ يُمْسِي مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا، يَبِيعُ دِينَهُ بِعَرَضٍ مِنَ الدُّنْيَا».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 118]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்:
((காரிருள் போன்ற பெரும் குழப்பங்கள் வருவதற்குள் நற்காரியங்களை செய்வதற்கு விரைந்திடுங்கள். அவ்வேளை ஒரு மனிதன்; காலையில் முஃமினாக இருந்து மாலையில் காபிராக மாறிவிடுவார், அல்லது மாலையில் முஃமினாக இருந்து காலையில் காபிராக மாறிவிடுவார். இவ்வுலகின் அற்பப் பொருளுக்காக தனது மார்க்கத்தையே விற்றுவிடுவார்.))
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 118]
நற்காரியங்களை தடுத்து நிறுத்தக்கூடியதும் அதில் கவனம் செலுத்துவதை விட்டும் திசைதிருப்பக் கூடியதுமான குழப்பங்களும் மார்க்கம் பற்றிய சந்தேகங்களும் நிலவும் காலம் வரமுன் நற்காரியங்களை அதிகம் செய்வதற்கு விரைந்து செல்லுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வலியுறுத்துகிறார்கள். அக்காலம் இரவின் எல்லாப் பகுதிகள் போல் இருள் சூழ்ந்த நிலை காணப்படும். அதில் சத்தியமும் அசத்தியமும் கலந்திருக்கும் இதனால் மக்கள் சத்தியத்தை அசத்தியத்தியத்திலிருந்து வேறுபடுத்தி இனங்காண மிகச்சிரமப்படுவர். இச்சிரமம் காரணமாக முஃமினனான நிலையில் காலையை அடைந்த ஒரு மனிதன் மாலையாகும் போது காபிராக மாறிவிடுவார் அல்லது மாலையில் முஃமினாக இருந்த மனிதன் காலையாகும் போது காபிராக மாறிவிடுவார். இது அழிந்து போகும் இவ்வுலகின் அற்ப பொருளுக்கு தனது மார்க்கத்தை விட்டுவிடுவதினால் ஏற்படும் நிலையாகும்.