عن أبي الدرداء رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال:
«مَنْ حَفِظَ عَشْرَ آيَاتٍ مِنْ أَوَّلِ سُورَةِ الكَهْفِ، عُصِمَ مِنَ الدَّجَّالِ». وفي رواية: «مِنْ آخِرِ سُورَةِ الكَهْف».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 809]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூத்தர்தா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் :
"கஹ்ஃப் அத்தியாயத்தின் முதல் பத்து வசனங்களை யார் மனனம் செய்கிறாரோ அவர் தஜ்ஜாலை விட்டும் பாதுகாப்பு பெறுவார். மற்றொரு அறிவிப்பில் ஸுறா கஹ்பின் இறுதி பத்து வசனங்கள் என்று வந்துள்ளது".
[சரியானது] - [இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [முஸ்லிம் - 809]
நபி ﷺ அவர்கள் அறிவித்தார்கள்: யார் ஸூரத்துல் கஹ்ஃபின் முதல் பத்து ஆயத்துகளை (புரிந்து) மனனம் செய்கிறாரோ, அவர் இறுதிக்காலத்தில் வெளிவந்து தன்னை இறைவன் என்று கூறும் மஸீஹுத் தஜ்ஜாலின் பெரும் சோதனையிலிருந்து பாதுகாக்கப்படுவார். தஜ்ஜாலின் சோதனையானது, ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டது முதல் கியாமத் நாள் ஏற்படும் வரையில் பூமியில் ஏற்பட்ட சோதனைகளை விட மிகப் பெரிய சோதனையாகும். அல்லாஹுத் தஆலா அவனுக்கு சில அசாதாரண நிகழ்வுகள் மூலம் அற்புதங்களை ஏற்படுத்துவதற்கான சக்தியை வழங்குவான்; அவற்றின் மூலம் அவனைப் பின்பற்றுவோரைக் கவர்வான். ஸூரத்துல் கஹ்ஃபின் முதல் பகுதியில் உள்ள அதிசயங்களும் அத்தாட்சிகளும், தஜ்ஜால் மக்களைச் சோதிக்கும் விடயங்களை விட மிக ஆபத்தனாவை. ஆகவே, அவற்றை ஆழமாக சிந்தித்து உணர்ந்தவர் தஜ்ஜாலின் மாயஞாலங்களுக்கு மயங்கிவிடமாட்டார். மற்றொரு அறிவிப்பில்;: ஸூராவின் இறுதி பத்து ஆயத்துகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை ஓதினாலும் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து பாதுகாப்புக்கிடைக்கும் அது 'அபஹசிபல்லதீனு கபரூ அய்யத்தகிது.. {أفحسب الذين كفروا أن يتخذوا...} என்று துவங்கும் வசனமாகும்.