«مَنْ يُرِدِ اللهُ بِهِ خَيْرًا يُصِبْ مِنْهُ».
[صحيح] - [رواه البخاري] - [صحيح البخاري: 5645]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
அல்லாஹ் யாருக்கு நலவு நாடுகின்றானோ அவனை சோதிப்பான். (அவருக்கு ஒரு துன்பத்தை ஏற்படுத்துவான்).
[சரியானது] - [இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்] - [புஹாரி - 5645]
அல்லாஹ் தன் அடியார்களுக்கு ஏதேனும் நலனைத் தர நாடினால் அவர்களின் பாவ காரியங்களின் குற்றப் பரிகாரத்துக்கும், அவர்களின் அந்தஸ்த்தின் உயர்வுக்கும் காரணமாக அமைவதற்கு அவர்களின் உயிர், செல்வம், பிள்ளைகள் விடயத்தில் அவர்களைச் சோதிப்பான் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெரிவிக்கிறார்கள்.