عن أبي هريرة رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «كل أُمتي مُعَافًى إلا المُجاهرين، وإنَّ من المُجَاهرة أن يعملَ الرجلُ بالليل عملًا، ثم يُصْبِح وقد سَتره الله عليه، فيقول: يا فلان، عَمِلت البَارحة كذا وكذا، وقد بَات يَسْتُره ربه، ويُصبح يَكشف سِتْرَ الله عنه».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...
என் சமூகத்தினர் அனைவரும் மன்னிக்கப்படுவர்.எனினும் தன் குற்றத்தை அம்பலப்படுத்தியவர்களைத் தவிர.இரவு காலத்தில் பாவ காரியம் ஒன்றைச் செய்த மனிதனின் தவறை அல்லாஹ் மறைத்து வைத்த போது அவன் காலையில் எழுந்ததும்,:இன்னவனே நான் நேற்றிரவு இப்படியெல்லாம் செய்தேன்,என்று அல்லாஹ் மறைத்து வைத்த தன்னுடைய தவறை அவன் காலையில் எழுந்ததும் இப்படி வெளிப்படுத்துவானாகில்,அது தன் தவறை அம்பலப்படுத்துதலாகும்.என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என அபூ ஹுராரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]
அல்லாஹ் முஸ்லிம்கள் யாவரினதும் குற்றங்களை மன்னிப்பான்.ஆனால் எவன் இரவு காலத்தில் பாவமான காரியத்தில் ஈடுபட்டிருந்து அதனை அல்லாஹ் மறைத்து வைத்திருந்தும் அவன் காலையில் எழுந்ததும் அதனை அவனே மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவானாகில் அவனை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.