«لَا تُطْرُونِي كَمَا أَطْرَتِ النَّصَارَى ابْنَ مَرْيَمَ؛ فَإِنَّمَا أَنَا عَبْدُهُ، فَقُولُوا: عَبْدُ اللهِ وَرَسُولُهُ».
[صحيح] - [رواه البخاري] - [صحيح البخاري: 3445]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுவதைத் தான் கேட்டதாக உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் :
'கிறிஸ்தவர்கள் மர்யமின் புதல்வரை (ஈஸாவை) அளவு கடந்து புகழ்ந்ததை போன்று என்னை நீங்கள் அளவு கடந்து புகழ வேண்டாம், நான் அல்லாஹ்வின் அடியானாவேன், எனவே அல்லாஹ்வின் அடியார், தூதர் என்றே கூறுங்கள்'.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்] - [صحيح البخاري - 3445]
கிறிஸ்தவர்கள் ஈஸா இப்னு மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு செய்தது போல், ஷரீஆ வரைமுறையை மீறி தன்னை அளவு கடந்து புகழ்வதையும், அல்லாஹ்வின் பண்புகள், மற்றும் அவனுக்கே உரித்தான விஷேட செயல்களைக் கொண்டு வர்ணிப்பதையும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தடுத்தார்கள், அதே போன்று நபியவர்கள் மறைவானவற்றை அறிகிறார் என்று கருதுவது, அல்லது அல்லாஹ்வுக்கு நிகராக அவர்களிடம் பிரார்த்திப்பது போன்ற விடயங்களையும் இந்த ஹதீஸில் தடுத்துள்ளார்கள். பின்னர் அவர்கள் தான் யார் என்பதை பின்வருமாறு தெளிவுபடுத்துகிறார்கள். தான் அல்லாஹ்வின் அடியார்களில் ஒவருன், என்னை நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என்று அழைக்குமாறு பணிக்கிறார்கள்.
ما حذَّر منه النبي صلى الله عليه وسلم قد وقع في هذه الأمة، فغَلَتْ طائفة بالرسول الله صلى الله عليه وسلم، وطائفة في أهل البيت، وطائفة في الأولياء، فوقعوا في الشرك.التعريف يحذف لانه مضاف اليه فغَلَتْ طائفة بالرسول الله