«مَنْ حَجَّ لِلهِ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 1521]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள் :
'உடலுறவில் ஈடுபடாமல், பாவங்கள் செய்யாமல் ஹஜ் செய்தவர் தனது தாய் அன்று ஈண்டெடுத்த பாலகன் போன்று திரும்புவார்'.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 1521]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் யார் ஒருவர் உடலுறவு மற்றும் அதனுடன் தொடர்பான முத்தமிடுதல், இச்சையுடன் தொடுதல் போன்ற ஆரம்ப செயற்பாடுகளில்; ஈடுபடாமலும் பாவமான மற்றும் தவறான காரியங்களை செய்யாமலும் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அன்று பிறந்த பாலகனைப் போன்று பாவங்கள் மன்னிக்கப்பட்டவராக வீடு திரும்புவார் எனத் தெளிவு படுத்தியுள்ளார்கள் ஹதீஸில் குறிப்பிடப்பட்ட 'ரபஸ்' என்ற வார்த்தையானது கெட்ட வார்த்தை பேசுதல் என்ற கருத்தையும் குறிக்கும். இங்கு குறிப்பிடப்பட்ட 'வலம் யப்ஸுக்' அதாவது புஸூக் என்பது இஹ்ராம் கட்டடியதும் செய்யக் கூடாத தடுக்கப்பட்ட காரியங்களைக் குறிக்கிறது. அதாவது ஒரு குழந்தை பாவமற்ற நிலையில் பிறப்பதைப் போன்று தனது ஹஜ்ஜிலிருந்து பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையில் திரும்புவார்.