«الرَّاحِمُونَ يَرْحَمُهمُ الرَّحمنُ، ارحَمُوا أهلَ الأرضِ يَرْحْمْكُم مَن في السّماء».
[صحيح] - [رواه أبو داود والترمذي وأحمد] - [سنن أبي داود: 4941]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹுமா கூறுகின்றார்கள் :
'இரக்கமுள்ளவர்களுக்கு அர்ரஹ்மானாகிய அல்லாஹ் இரக்கம் காட்டுவான், பூமியிலுள்ளவர்களுக்கு இரக்கம் காட்டுங்கள், வானிலுள்ளவன் உங்களுக்கு இரக்கம் காட்டுவான்'.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பிறருக்கு இரக்கம் காட்டுவோருக்கு அருளாளனாகிய அல்லாஹ் ஏகமெல்லாம் வியாபித்திருக்கும் அவனின் கருணையின் மூலம் நிறைவான கூலியை வழங்குகிறான் எனத் தெளிவுபடுத்துகிறார்கள்.
பின்னர் அவர்கள் இவ்வுலகிலுள்ள மனிதன் அல்லது மிருகம் அல்லது பறவை இவையல்லாத உயிரினங்கள் அனைத்திற்கும் கருணை காட்டுமாறு கட்டளைப்பிரப்பிக்கிறார்கள். இவ்வாறு செய்வதற்கான கூலி, கருணை காட்டுவோருக்கு அல்லாஹ் ஏழுவானங்களுக்கு மேலிருந்து அருள்,கருணை புரிவதே என குறிப்பிடுகிறார்கள்.