عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا تَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا، وَلَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا، أَوَلَا أَدُلُّكُمْ عَلَى شَيْءٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ؟ أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 54]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரையில் சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே ஸலாத்தைப் பரப்புங்கள்".
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 54]
முஃமின்களைத் தவிர வேறு எவறும் சுவர்க்கம் செல்லவே மாட்டார்கள் என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள். அதே போல் பரஸ்பரம் நேசம் கொள்ளாதவரை முஸ்லிம் சமூகம் சீர்பெறவோ, ஈமான் பரிபூரணம் பெறவோ மாட்டாது. இவ்வாறு கூறிவிட்டு நேசத்தை ஏற்படுத்தும் விடயங்களில் மிகவும் சிறப்புக்குரிய விடயமொன்றின் பால் வழிகாட்டுகிறார்கள். அதுதான் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்புவதாகும். அல்லாஹ் தனது அடியார்களுக்கு வாழத்துரைக்கும் ஒன்றாக ஸலாத்தை ஏற்படுத்தித்தந்துள்ளான்.