عَنْ عَبْدِ اللهِ بنِ مَسْعُودٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«أَوَّلُ مَا يُقْضَى بَيْنَ النَّاسِ يَوْمَ الْقِيَامَةِ فِي الدِّمَاءِ».

[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 1678]
المزيــد ...

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மறுமை நாளில் (மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில்) முதல்முதலாக மனிதர்களிடையே வழங்கப்படும் தீர்ப்பு கொலைகள் தொடர்பானதாகத் தான் இருக்கும்.

[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [முஸ்லிம் - 1678]

விளக்கம்

மறுமை நாளில் மனிதர்களுக்கு மத்தியில் நிகழ்ந்த, அநியாயம் தொடர்பில் கொலை மற்றும் காயப்படுத்தியமை பற்றியே முதலாவாதாக தீர்ப்பளிக்கப்படும் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. மறுமையில் விசாரிக்கப்படும் குற்றங்கள் தொடர்பான விடயங்களில் மிகப்பிரதானமான ஒன்று என்றவகையில் கொலைக்குற்றத்திற்கு முன்னுரிமை அளித்ததானது இதன் பாரதூரத்தன்மையை விளக்கப் போதுமான ஒன்றாகும்.
  2. பாவங்களின் கனதியானது, அதனால் ஏற்படும் விளைவைப் பொறுத்ததாகும். அந்த வகையில் அப்பாவித்தனமான உயிர்களை பறிப்பது மிகப்பெரும் கொடுமையாகும். இதனை விடவும் மிகவும் கொடுமை நிறைந்ததாக இறைநிராகரிப்பும், இணைவைப்பும் காணப்படுகின்றன.
மொழிபெயர்ப்பைக் காண
மொழி: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி மேலதிக விபரங்களுக்கு (55)
மேலதிக விபரங்களுக்கு