பிரிவுகள்:
+ -

عَنْ أَبِي هُرَيْرَةَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ صَخْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْت رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم يَقُولُ:
«مَا نَهَيْتُكُمْ عَنْهُ فَاجْتَنِبُوهُ، وَمَا أَمَرْتُكُمْ بِهِ فَافْعَلُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ، فَإِنَّمَا أَهْلَكَ الَّذِينَ مِنْ قَبْلِكُمْ كَثْرَةُ مَسَائِلِهِمْ، وَاخْتِلَافُهُمْ عَلَى أَنْبِيَائِهِمْ».

[صحيح] - [رواه البخاري ومسلم] - [الأربعون النووية: 9]
المزيــد ...

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் செவிமடுத்ததாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
"நான் உங்களுக்கு எதைத் தடை செய்திருக்கின்றேனோ அதனை முழுமையாகத் தவிர்ந்து கொள்ளுங்கள். நான் உங்களுக்கு எதை ஏவியுள்ளேனோ அதனை முடியுமானளவு செய்யுங்கள். அளவுக்கு அதிகமான கேள்விகளைக் கேட்டதும், தங்களுக்காக அனுப்பப்பட்ட இறைத்தூதர்களோடு ஒத்துப் போகாததுமே உங்களுக்கு முன்னால் இருந்தவர்களை அழிவுக்கு ஆக்கபடுத்தியது.

-

விளக்கம்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், எமக்கு ஏதாவது ஒன்றைத் தடை செய்தால், அதை விதிவிலக்கின்றி முழுமையாக தவிர்ந்து நடப்பது எம்மீது கடமை என்றும், அவர்கள் ஏதாவது செய்யுமாறு கட்டளையிட்டால், எம்மால் முடிந்தவரை அதைச் செய்ய வேண்டும் என்றும் இங்கு எங்களுக்கு தெளிவுபடுத்துகிறார்கள். அதனைத்தொடர்ந்து, நபியவர்கள் முன்பு வாழ்ந்த சில சமூகங்கள் தங்கள் தூதுவர்களிடம்; பயனற்ற கேள்விகளை அதிகம் கேட்டு, அவர்களுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தார்கள். அவர்களைப் போல இருக்க வேண்டாம் என்று எம்மை எச்சரிக்கிறார்கள். இவ்வாறான நடத்தையுடையவர்களை அல்லாஹ் பல்வேறு வகையான பேரழிவுகள் மூலம்; தண்டித்தான். எனவே நாமும் அவர்கள் போலல்லாது இருப்பது அவசியம். அவர்கள் போன்று நாம் இருந்தால் அவர்களின் நிலையே எமக்கும் ஏற்படும்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. கட்டளையிடப்பட்டதைச் செய்வதும், தடைசெய்யப்பட்டதைத் தவிர்ப்பதும் கடமை என்பதை விவவரிப்பதில் இந்த ஹதீஸ் ஒரு அடிப்படையாக திகழ்கிறது.
  2. இங்கு தடுக்கப்பட்ட எதிலும் செய்வதற்குச் சலுகை வழங்கப்பட வில்லை, கட்டளையானது ஆற்றல் மற்றும் இயலுமையுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஒன்றை விடுவது முடியுமான விடயமாகும், ஏவப்பட்ட ஒன்றை செய்வதற்குத் தான் மேலதிக ஆற்றல் அவசியமாகின்றது.
  3. தடை செய்யப்பட்டவற்றில் சிறிதளவு, அதிகளவு என்ற வரையரை கிடையாது. மாறாக அனைத்தையும் அது உள்ளடக்குகின்றது. ஏனெனில் தவிர்ந்து கொள்ளும் போது அதில் சிறிதளவு, அதிகளவு அனைத்தையும் தவிர்ந்து கொள்வதன் மூலம்தான் சாத்தியமாகும். உதாரணமாக வட்டியை இஸ்லாம் தடுத்துள்ளது. அதில் சிறிதளவு, அதிகளவு அனைத்தையும் இத்தடை உள்ளடக்குகின்றது
  4. ஹராமான ஒன்றிற்கு வழிவகுக்கும் காரணிகளை கைவிடுவதும் ,தவிர்ந்து கொள்ளுதல் என்பதில் உள்ளடங்கும்.
  5. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் கட்டளையொன்றை செவிமடுக்கும் ஒருவர் அது கடமையா, ஸுன்னத்தா எனக் கேட்பது அவசியமில்லை. மாறாக அதனை செய்ய விரைய வேண்டும். ஏனெனில் நபியவர்கள் உங்களால் முடியுமான அளவு செய்யுங்கள் எனக் கூறியுள்ளார்கள்.
  6. அதிகமாகக் கேள்விகள் கேட்பது அழிவுக்குக் காரணமாகும். குறிப்பாக புறக்கண்களுக்கு தெரியாத விடயங்கள் மற்றும் மறுமை நாளின் நிலைமைகள் போன்ற அடைய முடியாத விடயங்களில் கேள்விகேட்பதை தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும். அவற்றைப் பற்றி அதிகமாகக் கேள்விகள் கேட்பதால் நீ அழிந்து விடுவாய் அதுமாத்திரமின்றி நீ ஒரு தீவிரப்போக்கு கொண்டவனாகவும் மாறிவிடுவாய்.
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது இந்தோனேஷியன் வங்காள மொழி துருக்கிய மொழி ரஷியன் ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி தாய்லாந்து بشتو Осомӣ Албанӣ الأمهرية الغوجاراتية Қирғизӣ النيبالية الدرية الصربية الطاجيكية Кинёрвондӣ المجرية التشيكية الموري Канада الولوف Озарӣ الأوزبكية الأوكرانية الجورجية المقدونية الخميرية
மொழிபெயர்ப்பைக் காண
பிரிவுகள்
மேலதிக விபரங்களுக்கு