«لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 15]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
'உங்களில் ஒருவருக்கு தனது பெற்றோர்; தனது குழந்தை, ஏனைய மனிதர்கள் அனைவரையும் விட நான் அதிக நேசத்திற்குரியவராக ஆகும்வரையில் அவர் (உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்'.
ஒரு முஸ்லிம் தனது பிள்ளை, தந்தை, மற்றும் அனைத்து மனிதர்களுடனான நேசத்தை விட தன் மீதான நேசத்தை முற்படுத்தும் வரையில் அவனுடைய ஈமான் பூரணமடைய மாட்டாது, என இந் நபிமொழியில் நபியவர்கள் எமக்கு அறியத்தருகிறார்கள்.